
‘‘உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த திவ்யா சத்யராஜ்?,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’பணக்கார நாய்களுக்கு கவலைப்படுகிறார்கள், வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு மரியாதை தராதவர்கள் – திவ்யா சத்யராஜ், திமுக’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாய் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
News Tamil 24×7 லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது News Tamil 24X7 பெயரில் பரவும் வதந்தி என்றும், உண்மையான நியூஸ் கார்டு வேறொன்று என்றும், தெரியவந்தது.

இதன்படி, உண்மையான நியூஸ் கார்டில் விஜய் மற்றும் திரிஷா புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை வேண்டுமென்றே எடிட் செய்து, தவெக ஆதரவாளர்கள் திமுகவுக்கு எதிராக, வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
கூடுதல் ஆதாரத்திற்காக, News Tamil 24X7 ஆசிரியர் குழு மற்றும் திவ்யா சத்யராஜ் தரப்பிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


