செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ரங்கராஜ் பாண்டே பூஜை செய்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், "விவசாயத்திற்கு எதுக்கு தனி பட்ஜெட்- #ரங்கராஜ்பாண்டே. உங்களுக்கென்ன ஓய் ! கடைசி வரைக்கும் தட்டேந்தியே பொழச்சிப்பேள்! நாங்க அப்பிடியா?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Shali Mary என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தங்கள் கட்சிக்கு எதிரான கருத்துக்களை கூறுபவர்களை போட்டோ எடிட் செய்து விமர்சிக்கும் பழக்கம் அனைத்துக் கட்சியினர் மத்தியிலும் உள்ளது. செய்தியாளர்கள் ரங்கராஜ் பாண்டே, செந்தில் தொடர்பாக விஷமத்தனங்களை சிலர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரப்பி வருவதைக் காண முடிகிறது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் இருப்பது ரங்கராஜ் பாண்டேவா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பிராமணர் என்று குறிப்பிட்டுப் பல இணையதளங்களில் பதிவிடப்பட்டு வந்த படத்தை எடிட் செய்து ரங்கராஜ் பாண்டே தலையை வைத்திருப்பது தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: jagannathpurihkm I Archive

உண்மையான படத்தில் உள்ள நபர் யார் என்று தொடர்ந்து தேடினோம். அப்போது Gaudapadacharya என்ற மடத்தின் 77வது பீடாதிபதி சிவானந்த சரஸ்வதி சுவாமி என்று குறிப்பிட்டு சில பதிவுகள் கிடைத்தன. இதன் மூலம் பூஜை செய்யும் ரங்கராஜ் பாண்டே படம் போட்டோ எடிட் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

இதே போல் சின்ன வயதில் ரங்கராஜ் பாண்டே ஆர்.எஸ்.எஸ் உடையில் கையில் துப்பாக்கி பிடித்தபடி போஸ் கொடுத்தார் என்று ஒரு பதிவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அந்த படத்தையும் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் 2015ம் ஆண்டில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. வட இந்தியர் ஒருவர் வெளியிட்டிருந்த பதிவில் இந்த படத்தை பயன்படுத்தியிருந்தார்.

அதே போன்று இளம் வயது ரங்கராஜ் பாண்டே படம் என்று சமூக ஊடகங்களில் பரவி வருவது பற்றி ரங்கராஜ் பாண்டேவே கூட 2015ம் ஆண்டில் ஃபேஸ்புக்கில் அளித்திருந்த விளக்கம் நமக்குக் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2

அதில், "பயங்கரவாதி பாண்டே’வின் படமாம். அதுவும் சின்ன வயதில் எடுத்த படமாம். பார்ப்பதற்கு, என்னைப் போலவா இருக்கிறது? யார் பெற்ற பிள்ளையோ, என் பெயரால் ஏச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இதுவும் ரங்கராஜ் பாண்டே இல்லை என்பது உறுதியானது.

முடிவு:

நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ரங்கராஜ் பாண்டே என்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகும் போலியான படங்கள்!

Fact Check By: Chendur Pandian

Result: Altered