‘’மதுரை விமான நிலையத்திற்கு வரும் டிசம்பர் மாதம் பெயர் மாற்றப்படும். இதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு செய்தி, ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என்று நம்பி பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
மதுரையில் உள்ள விமான நிலையத்திற்கு, முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்ட வேண்டுமென்று, அவரது அபிமானிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், மதுரை விமான நிலையத்திற்கு, வரும் டிசம்பர் மாதம் தேவர் பெயர் வைக்கப்படும் என்றும், இதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியதாக, தந்தி டிவி பெயரில் மேற்கண்ட செய்தி பகிரப்பட்டு வருகிறது.

உண்மையில், இது தங்களது பெயரில் பரவும் போலியான செய்தி என்று, தந்தி டிவி மறுப்பு தெரிவித்துள்ளது.

Archived Link

எனவே, போலியான செய்தி என்று கூட தெரியாமல், பலரும் இதனை ஷேர் செய்வதாக, சந்தேகமின்ற உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page

Avatar

Title:மதுரை விமான நிலையத்தின் பெயரை மாற்ற கோரி மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False