FactCheck: பாஜக முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பற்றி பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம்

பட்டியல் சமூக பெண்கள் பற்றி மிகவும் இழிவாகப் பேசிய பாஜக பெண் நிர்வாகி, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim Link Archived Link

இதில், பாஜக.,வைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர், ‘’பறைச்சிகள் எல்லாம் ஜாக்கெட் அணிவதுதான் துணி விலை உயர்கிறது,’’ என்று குறிப்பிட்டு பேசுகிறார். சில விநாடிகள் மட்டுமே இந்த வீடியோ காட்சிகள் உள்ளன. எனவே, அவர் முழுமையாக என்ன பேசினார் என்ற விவரம் தெரியவில்லை.

ஆனால், இதனையே உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை சில முறை ஆய்வுக்காக, நாம் மீண்டும் மீண்டும் பார்த்தபோது, அதில் நமக்கு ஒரு துப்பு கிடைத்தது. அது என்னவெனில், அந்த வீடியோ முழுமையானது இல்லை, ஒரு வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பதிவு செய்து, இங்கே வெளியிட்டிருக்கிறார்கள் என்று நமக்கு தெளிவாகிறது.

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவிலேயே, ஓரிடத்தில், அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான முழு time frame, title உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக, தெரிவதைக் காணலாம். அதைச் சரியாகக் கவனிக்காமல், ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்.

இதன்படி, Tamilnadu election 2021 – bjp former MLA Gayatri Devi brings Periyar into controversy என்ற Title வாசகத்தை பயன்படுத்தி, யூடியுப் சென்று தகவல் தேடினோம். அப்போது Rex Pix 24×7 ஊடகம் வெளியிட்ட முழு வீடியோ விவரம் கிடைத்தது.

இந்த வீடியோவின் 2.38 நிமிடம் முதல் 3.05 நிமிடம் வரை காயத்ரி தேவி குறிப்பிட்ட வீடியோவில் உள்ள விவரத்தை பேசுகிறார். அது மட்டுமல்ல, அதற்கும் மேலும் அவர் தொடர்ச்சியாகப் பேசுவதைக் கேட்டால், அர்த்தமே மாறுகிறது. அதாவது, ‘’நேற்றைய தினம் கூட ஒரு பத்திரிகையில் வந்ததைப் பார்த்தேன். ஈவெரா பெரியார் அவர்கள், சொல்லுவதற்கே வாய் கூசுகின்றது, இருந்தாலும் சொல்லித்தானே ஆக வேண்டும் என்பதற்காகச் சொல்லுகின்றேன். பறைச்சிகள் எல்லாம் ஜாக்கெட் போடுவதால்தான் துணி விலை உயர்கின்றது. பறையர்கள் எல்லாம் படிப்பதால்தான் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கின்றது, என்று சொல்லியிருக்கிறார்,’’ என்று பேசுகிறார்.

ஆனால், காயத்ரி தேவியின் முழு பேச்சை பதிவு செய்யாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடிட் செய்து, தங்களது சுய அரசியல் நோக்கத்திற்காக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட வைரல் வீடியோவையும், உண்மை வீடியோவையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பாஜக முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பற்றி பரவும் வதந்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply