
‘’மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை மட்டுமே நியமனம் செய்ய நடவடிக்கை,’’ என்று கூறி தந்தி டிவி வெளியிட்ட செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
முதலில், வீடியோவாக வெளியிட்ட இதே செய்திக்கு ஃபாலோ அப் முறையில், ஒரு நியூஸ் கார்டையும் பிறகு தந்தி டிவி வெளியிட்டிருக்கிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.
இந்த செய்தியை உண்மை என நம்பி, பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
இவர்கள் மட்டுமல்ல, நிறைய ஊடகங்களும், தந்தி டிவி செய்தியை மேற்கோள் காட்டி, குறிப்பிட்ட தகவலை செய்தி வெளியிட்டு வருகின்றன.
உண்மை அறிவோம்:
அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செய்தியாளர் சந்திப்பு ஜூன் 07, 2021 அன்று நடைபெற்றது. நீட் தேர்வு விவகாரம், தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படும் சூழலில், மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண் எப்படி நிர்ணயிக்கப்படும் என்பது போன்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்திருந்தார்.
இதுபற்றி முதலில் தந்தி டிவி வெளியிட்ட செய்தி ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.
Thanthi TV News Link I Archived Link
எனினும், இது அனைத்து ஊடகங்களுக்கும் அளித்த பேட்டியாகும். தந்தி டிவிக்கு என்று பிரத்யேக
பேட்டி அளித்தாக, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதால், அப்படி
ஏதேனும் பேட்டி அளித்தாரா என்று நீண்ட நேரம் தேடினோம். அப்போது, நமக்கு ஒரு லிங்க்
கிடைத்தது.
ஆனால், இந்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், நெறியாளர் சங்கரிடம் எந்த இடத்திலும், ‘’மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை மட்டுமே நியமனம் செய்ய நடவடிக்கை‘’, என்று கூறவில்லை. ஒருவேளை அதனை அகற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, இதுபற்றி மேலும் ஏதேனும் வீடியோவை தந்திடிவி வெளியிட்டுள்ளதா என்று தேடினோம். அப்போது, கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி குறித்து, தந்தி டிவி வெளியிட்ட மற்றொரு வீடியோ இணைப்பு கிடைத்தது.
இந்த வீடியோவில், தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘’நிர்வாக ரீதியாக பெண் ஆசிரியர் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து, சம்பந்தப்பட்ட பள்ளியே இந்த பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம்,’’ என்கிறார்.
தொடர்ந்து, ‘பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் சபிதா இதுபோன்ற பாலியல் புகார்களை கையாளும் நோக்கில், முடிந்தவரை பெண்கள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை நியமிக்க நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில் நீங்கள் எதுவும் நடவடிக்கை எடுப்பீர்களா‘, என்று நெறியாளர் கேட்கிறார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர், ‘’இந்த கருத்து நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியவருகிறது. கண்டிப்பாக, இதுபற்றி முதன்மை செயலாளர், கமிஷனில் பேசி, அதனை செயல்படுத்துபற்றி முடிவு செய்யலாம். நல்ல ஆலோசனையாக தெரிகிறது,’’ என்றார்.
இந்த வீடியோவின் 1.45வது நிமிடம் முதல் இறுதி வரை இந்த கேள்வி, பதில் இடம்பெற்றுள்ளது.
Archived Video Link
இறுதியாக, குறிப்பிட்ட செய்தி வைரலாகப் பரவி வரும் சூழலில், இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு அளித்துள்ளார்.
Archived Link
எனவே, ‘பரிந்துரை பற்றி ஆலோசிக்கிறோம்’ என்றுதான் அமைச்சர் கூறியுள்ளாரே ஒழிய, ‘அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதி அளிக்கவில்லை, என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page

Title:FactCheck: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்தி டிவி பேட்டியில் சொன்னது என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
