
‘’ ‘ஜான் பென்னிகுயிக் சிலை எதற்கு’’ என்று அண்ணாமலை கேட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வகையில், கதிர் நியூஸ் ஊடகம் செய்தி எதுவும் வெளியிட்டுள்ளதா என்று தகவல் தேடினோம். ஆனால், எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை. அடுத்தப்படியாக, நாம் கதிர் நியூஸ் ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்த்தபோது, ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று ஏற்கனவே அவர்கள் தரப்பில் மறுப்பு கூறப்பட்டிருந்தது.
அதேசமயம், ‘இவ்வாறு அண்ணாமலை எதுவும் பேசினாரா,’ என்று பாஜக ஐ.டி. பிரிவு தரப்பில் கேட்டபோது, ‘இல்லை’ என்று உறுதி செய்தனர்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘ஜான் பென்னிகுயிக் சிலை எதற்கு’ என்று அண்ணாமலை கேட்டாரா?
Written By: Fact Crescendo TeamResult: False
