கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தாரா அனிதா சம்பத்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த அனிதா சம்பத்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இந்த நியூஸ் கார்டில், ‘’ கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை உதய் நேரில் நலம் விசாரித்தது குறித்து அனிதா சம்பத் கமெண்ட்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்ற ஊரில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கடந்த 20.06.2024 அன்று திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்தார்.

இதேபோன்று, நடிகரும், TVK கட்சித் தலைவருமான விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து, நலம் விசாரித்தார். அப்போது, தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் என்று விஜய் கருத்து தெரிவித்தார். 

Vikatan Link l Dinamalar Link l Maalaimalar Link 

இதன்பேரில், விஜயை விமர்சித்து, திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் ஒன்றாக, பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் , அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறி ABP Nadu ஊடகம் செய்தி வெளியிட்டது. 

ABP Nadu Tweet 

இந்த டெம்ப்ளேட்டை எடுத்து, விஜய் ஆதரவாளர்கள் வேண்டுமென்றே எடிட் செய்து, உதயநிதி பற்றி அனிதா சம்பத் கமெண்ட் என்று கூறி மேற்கண்ட வகையில் வதந்தி பரப்புகிறார்கள். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட டெம்ப்ளேட், எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

இதற்கிடையே ABP Nadu வெளியிட்டிருந்த நியூஸ்கார்டுக்கு மறுப்பு தெரிவித்து அனிதா சம்பத் கமெண்ட் பதிவு செய்துள்ளதாக, விவரம் கிடைத்தது. அதனையும் கீழே இணைத்துள்ளோம். 

ABP Nadu Instagram Post l Anitha Sampath Comment

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தாரா அனிதா சம்பத்?

Fact Check By: Fact Crescendo Team 

Result: ALTERED

Leave a Reply