ஈரானின் குட்டி தேவதைக்கு கொரோனா!- ஃபேஸ்புக்கில் வைரலாகும் சிறுமி யார்?

Coronavirus சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

ஈரானின் குட்டி தேவதைக்கு கொரோனா என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த சிறுமி யார், அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

படுக்கையில் இருக்கும் சிறுமியின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதனுடன், அழகு சிறுமியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிய குட்டி தேவதைக்கு கொரானாவாம்..😢😢

Pray for her..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Syeda Fareeha என்பவர் 2020 மார்ச் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஈரானைச் சேர்ந்த சிறுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த சிறுமி யார் என்பதை அறிய அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

படத்தில் இருக்கும் சிறுமியின் பெயர் அனாஹிதா என்றும், ஈரானின் குழந்தை நட்சத்திரம் என்றும் பல பதிவுகள் நமக்கு கிடைத்தன. அவருடைய பெயரை கீவோர்டாக பயன்படுத்தி கூகுளில் தேடியபோது சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கம் கிடைத்தது. மேலும், சிறுமி அனாஹிதா பற்றி வதந்தி பரவி வருவதாக செய்தி ஒன்றும் கிடைத்தது. 

Search Link 1Search Link 2

இன்ஸ்டாகிராம் பக்கத்துக்குச் சென்று பார்த்தோம். மார்ச் 27ம் தேதி பிற்பகலில் கூட சிறுமி மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தனர். ஈரானிய பெர்ஷிய மொழியில் எழுதப்பட்டிருந்ததால் அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம்.

அதில், யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள், வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்ற வகையில் பொது நல கருத்தைப் பகிர்ந்திருந்தனர். இந்த பதிவுக்கு பலரும் அனாஹிதா எப்படி இருக்கிறார் என்று கேட்டு பதிவிட்டிருந்தனர். அதற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிர்வகித்துவரும் அவரது அம்மா, ‘அனாஹிதா நலமாக உள்ளார்’ என்று பதிவிட்டிருந்தார்.

instagram.comArchived Link

வீடியோவில் இருக்கும் சிறுமி யார் என்று ஆய்வு செய்தோம். அப்போது நம்முடைய இலங்கைப் பிரிவில் வெளியான உண்மை கண்டறியும் ஆய்வு நமக்கு கிடைத்தது.

அதில், சிறுமி நலமாக இருப்பதாக அவரது பெற்றோர் தகவல் வெளியிட்டிருப்பதாகவும் வீடியோவில் உள்ள சிறுமி அனாஹிதா போல் உருவ ஒற்றுமை உள்ளவர் என்றும், சிறுமி அனாஹிதாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

நம்முடைய ஆய்வில், வீடியோவில் இருக்கும் சிறுமி ஈரானின் பிரபல குழந்தை நட்சத்திரம் இல்லை என்பது உறுதியாகியுள்ளளது.

srilanka.factcrescendo.com

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஈரானின் குட்டி தேவதைக்கு கொரோனா!- ஃபேஸ்புக்கில் வைரலாகும் சிறுமி யார்?

Fact Check By: Chendur Pandian 

Result: False