
பா.ஜ.க-வினர் மீதான கற்பழிப்பு வழக்குகள் எங்கள் வெற்றியை பாதிக்காது என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “பாஜகவினர் மீதான கற்பழிப்பு வழக்குகள் எங்கள் வெற்றியை பாதிக்காது – தமிழக பாஜக தலைவர் முருகன்” என்று இருந்தது.
இந்த நியூஸ் கார்டை தமிழர்களின் சங்கமம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மார்ச் 3 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு போலவே உள்ளது. இருப்பினும் தங்கள் கட்சியினர் மீதான பாலியல் வழக்குகள் பற்றி இப்படி வெளிப்படையாக பேசுவார்களா என்ற கேள்வி வரவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
சமீபத்தில் முருகன் இப்படி எதுவும் பேட்டி அளித்தாரா என்று தேடினோம். குறிப்பாக இந்த நியூஸ் கார்டில் 2021 மார்ச் 3 என்று குறிப்பிட்டுள்ளதால் அந்த தேதியில் அவர் அப்படி எதுவும் பேசியுள்ளாரா என்று கூகுளில் தேடினோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்ட போது இது போலியானது என்றார்.
எனவே, தந்தி டி.வி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். இது தொடர்பாக தந்தி டி.வி ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தபோது, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு தந்தி டி.வி-யில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பாஜக-வினர் மீதான பாலியல் வழக்குகள் எங்கள் வெற்றியை பாதிக்காது என்று எல்.முருகன் கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை, இது போலியான நியூஸ் கார்டு என்று தந்தி டிவி உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பா.ஜ.க-வினர் மீதான பாலியல் வழக்கு வெற்றியை பாதிக்காது என்று எல்.முருகன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பா.ஜ.க-வினர் மீதான பாலியல் வழக்குகள் வெற்றியை பாதிக்காது என்று எல்.முருகன் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
