சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து புகைப்படம் இதுவா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து புகைப்படம்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim Link I Archived Link

இந்த ஃபேஸ்புக் பதிவின் தலைப்பில், ‘’ அரிய புகைப்படம் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மதிப்புமிகு மவுலானா அப்துல் கலாம் ஆசாத் ஒருங்கிணைத்த முதல் #இப்தார் நிகழ்ச்சி இந்நிகழ்வில் மாண்புமிகு ஜவஹர்லால் நேரு புரட்சியாளர் அம்பேத்கர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, https://zoroastrians.net/ என்ற இணையதளத்தில் இதனை பதிவேற்றியிருந்ததைக் கண்டோம். அதில், 1948ல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவியேற்ற ராஜாஜிக்கு, சர்தார் படேல் விருந்து அளித்தார் என்றும், நேரு, அம்பேத்கார் உள்ளிட்ட பலர் இந்த விருந்தில் பங்கேற்றனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Zoroastrians.net Post Link

இதுபற்றி alamy இணையதளத்தில் வேறொரு விதமாக தகவல் பகிரப்பட்டிருந்ததையும் கண்டோம். ஆனால், எதிலும் ‘இதுதான் சுதந்திர இந்தியாவின் அரசுப் பிரதிநிதிகள் பங்கேற்ற முதல் இஃப்தார் விருந்து,’ என்று கூறவில்லை.

Alamy.com Link

இந்த புகைப்படம் பற்றி பிபிசி ஊடகம் மராத்தி மொழியில் வெளியிட்ட செய்தி லிங்க் ஒன்றும் கீழே தரப்பட்டுள்ளது.

BBC Marathi Article Link

எனவே, சர்தார் படேல் ராஜாஜிக்கு அளித்த விருந்து ஒன்றின் புகைப்படத்தை எடுத்து, சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து எனக் குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து புகைப்படம் இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False