பில் கேட்ஸ் அவரது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்தாரா? 

உலகச் செய்திகள் கோவிட் 19 சமூக ஊடகம்

‘’பில் கேட்ஸ் தனது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், உலக மக்களை தடுப்பூசி போடும்படி பிரசாரம் செய்கிறார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்

தகவலின் விவரம்:


இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, இந்த பதிவு கடந்த 2018-19 முதலாகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் கண்டோம்.

Facebook Claim Link 1 I Archived Link 1

Facebook Claim Link 2 I Archived Link 2 

உண்மை அறிவோம்:
கடந்த 2018-19 காலக்கட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் தொடங்கி, உலகம் முழுக்க பரவியது. இதனால், இயல்பு வாழ்க்கை உலக அளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட சூழலில், இந்த வைரஸ் தொற்று தொடர்பாக ஏராளமான கட்டுக்கதைகளும் சமூக வலைதளங்களில் பரவின. குறிப்பாக, உலகம் முழுக்க தடுப்பூசி விழிப்புணர்வை முன்னெடுத்து வரும் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோரை மையப்படுத்தி நிறைய தகவல்கள் சமூக வலைதள பயனாளர்களால் பகிரப்பட்டன. அந்த வரிசையில் பகிரப்பட்ட ஒன்றுதான் மேலே நாம் கண்ட தகவலும்.

இதுபற்றி 2018ல் ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.

politifact link

உண்மையில், பில் கேட்ஸ் குழந்தைகளுக்கு தடுப்பூசி முறைப்படி போடப்பட்டதாகவும், இந்த தகவல் தவறான ஒன்று எனவும் ஏற்கனவே பில் கேட்ஸ் மனைவி மெலிண்டா, 2019 காலத்திலேயே மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்றை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

எனவே, ஏற்கனவே பழைய செய்தியை எடுத்து, உண்மைத்தன்மை தெரியாமல் மீண்டும் புதியதுபோல சமூக வலைதளங்களில் சிலர் பகிர்கிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் பற்றிய உண்மையை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் எடுத்துக் கூறியுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

Avatar

Title:பில் கேட்ஸ் அவரது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்தாரா? 

Fact Check By: Pankaj Iyer 

Result: False

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram