கும்பகோணத்தில் ஜி.கே.வாசன் பேச்சை கேட்க வந்த கூட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

கும்பகோணத்தில் ஜி.கே.வாசனின் பேச்சைக் கேட்க கூடிய கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Breaking news புரட்சி பேச்சாளர் ஐயா G k வாசன் பேச்சை கேட்க குடந்தையில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தின் சிறு பகுதி 😲” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொண்டர்கள் ஆதரவு மிகக் குறைவாக உள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் பேச்சைக் கேட்கக் கூடிய கூட்டம் என்று மும்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர். இதை நையாண்டிக்காகப் பதிவிட்டார்களா அல்லது இதை உண்மை என்று நம்பி பதிவிட்டார்களா என்று தெரியவில்லை. 

நமக்கு இந்த பதிவு நையாண்டிக்கு வெளியிட்டதாக இருக்கலாம் என்று தெரிந்தாலும், பதிவில் அப்படியான குறிப்பு எதுவும் இல்லாததால் இது பற்றி ஆய்வு செய்தோம். புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படத்தை 2024ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், மும்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது சிறப்பாக செயல்பட்ட மகாராஷ்டிர முதலமைச்சர், மும்பை போலீஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தனர்.

2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மும்பையில் இந்திய அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று அப்போது ஊடகங்களில் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்ததையும் கண்டோம். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2024ம் ஆண்டு மும்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் புகைப்படத்தை கும்பகோணத்தில் ஜி.கே.வாசன் பேச்சை கேட்க கூடிய கூட்டம் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: கும்பகோணத்தில் ஜி.கே.வாசன் பேச்சை கேட்க வந்த கூட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply