பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் இந்திய முஸ்லீம்கள்: விபரீத ஃபேஸ்புக் பதிவு

சமூக ஊடகம்

‘’பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் பட்டியலில் இந்திய முஸ்லீம்கள் முதலிடம்- மகளிர் ஆணையம் பாராட்டு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\muslim 2.png

Facebook Link I Archived Link

இஸ்லாம் ஒர் இனிய மார்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 19, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டவர், தனது சமூகத்திற்கு நற்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதனை பகிர்ந்துள்ளார். ஆனால், உண்மையில், இப்படி ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி தாங்களே நற்சான்றிதழ் கொடுத்துக் கொள்ள தொடங்கினால் என்ன நடக்கும் என்பதை வாசகர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தாங்கள் நினைத்தபடி, எதை வேண்டுமானாலும் எழுதி, தன்னைத் தானே ஒருவர் பாராட்டிக் கொள்ள தொடங்கினால் என்னவாகும்? அப்படி செய்வது சமூகத்தில் விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும். அதுபோல, தவறான முன்உதாரணமாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உள்ளது.

தங்கள் சமூகத்தின் பேரில் அக்கறை செலுத்துபவர்கள், அதுபற்றி ஏதேனும் பொதுக்கூட்டம் நடத்தலாம், அல்லது விரிவான செய்திக்கட்டுரை எழுதி பகிரலாம். ஆனால், ஒரு டிவியின் பேரை பயன்படுத்தி, போலி நியூஸ் கார்டு தயாரித்து செய்தி பகிர்வது தவறான விசயமாகும். இது சம்பந்தப்பட்ட டிவி நிறுவனத்திற்கு களங்கம் விளைவிக்கும் செயலாக உள்ளது.

C:\Users\parthiban\Desktop\muslim 3.png

அத்துடன், இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள நியூஸ் கார்டு போல எதுவும், அன்றைய தேதியில், அதாவது ஜனவரி 28, 2019 அன்று நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிடவில்லை. இதே நியூஸ் கார்டை பயன்படுத்தி, ஏற்கனவே இந்த ஃபேஸ்புக் ஐடி ஒரு தவறான நியூஸ் கார்டு வெளியிட்டிருந்ததை நாம் ஆய்வு செய்து, தவறு என நிரூபித்துள்ளோம். அதே நியூஸ் கார்டை சற்று திருப்பிப் போட்டு, தற்போது இப்புதிய நியூஸ் கார்டை தயாரித்திருக்கிறார்கள். நமது முந்தையை செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, ஃபேக் நியூஸ் கார்டு தயாரித்தவர்கள், ஒரே தேதியில் அதை தயாரித்திருக்கிறார்கள். நாம் முன்பு வெளியிட்டிருந்த செய்தியை படித்துவிட்டு, இந்த ஃபேஸ்புக் பதிவை உற்று கவனித்தால், இது எளிதில் விளங்கும்.

அத்துடன், இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுதான் என்பதை உறுதி செய்ய, FotoForensics இணையதள உதவியை நாடினோம். அந்த இணையதளத்தில் குறிப்பிட்ட நியூஸ் கார்டே பதிவேற்றியபோது, இதில் ஏகப்பட்ட பூச்சுவேலைகள் செய்திருப்பது கண்கூடாக தெரியவந்தது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் இந்திய முஸ்லீம்கள்: விபரீத ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Parthiban S 

Result: False