மெக்காவில் பனிப்பொழிவு என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

மெக்காவில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு 2023ல் பனிப்பொழிவு ஏற்பட்டது என்று ஒரு வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: YouTube I Archive

இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவில் பனிப்பொழிவு ஏற்பட்டது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோ பற்றிய குறிப்பில், “85 – ஆண்டில் இல்லாத பனிப்பொழிவு காணும் தூய மக்கா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை  Mohamed musthafa என்ற யூடியூப் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 2ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சௌதி அரேபியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம். ஆனால், அதிக வெப்பம் நிலவும் மெக்கா பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டது என்பது நம்பும் வகையில் இல்லை. இதே போல் மதினாவில் உள்ள மசூதியில் பனிப்பொழிவு ஏற்பட்டது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வதந்தி பரப்பப்பட்டது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும், வீடியோவை உற்றுப் பார்க்கும் போது பொது மக்கள் யாரும் பனிப்பொழிவைப் பொருட்படுத்தவில்லை. மேலும், பயணிகள் மீது பனி விழுந்தது போலவும் இல்லை. மொபைல் “ஆப்” பயன்படுத்தி பனிப்பொழிவு காட்சியை ஏற்படுத்தியது போல உள்ளது. எனவே, இந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: meteoprog.com I Archive

ஜனவரி தொடங்கி ஒரு சில நாட்கள்தான் ஆகிறது. எனவே, பதிவு வெளியான 2ம் தேதி மற்றும் 1ம் தேதியில் மக்கா நகரின் தட்பவெப்ப நிலை எப்படி இருந்தது என்று பார்த்தோம். அதிகபட்சம் 29 டிகிரி செல்ஷியஸ் என்றும் குறைந்தபட்சம் 20 டிகிரி செல்ஷியஸ் என்றும் வானிலை தகவல் அளிக்கும் இணையதளங்கள் தெரிவித்திருந்தன. 21 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் பனிப்பொழிவு நிகழாது. 

Archive

கூகுளில் மெக்கா பனிப்பொழிவு என்று டைப் செய்து தேடிய போது, சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ தவறானது என்று குறிப்பிட்டு சில செய்திகள் வெளியாகி இருந்தன. அவற்றைப் பார்த்தபோது மெக்காவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், சௌதி அரேபியாவின் வானிலை ஆய்வு மைய செய்தித் தொடர்பாளர் என அதிகாரப்பூர்வ நபர்கள், சமூக ஊடக பக்கங்களில் இந்த வீடியோ உண்மையானது இல்லை என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. 

இதன் மூலம் இஸ்லாமியர்களின் புனித மெக்கா மசூதியில் பனிப் பொழிவு ஏற்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையானது இல்லை, எடிட் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மெக்காவில் பனி பொழிந்ததாக பகிரப்படும் வீடியோ உண்மையானது இல்லை என்றும் மெக்காவில் பனிப்பொழிவு எதுவும் நிகழவில்லை என்பதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மெக்காவில் பனிப்பொழிவு என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered