FactCheck: மத்தியப் பிரதேசத்தில் காதலியை அடித்து உதைத்த முரட்டு காதலன் இந்துவா, முஸ்லீமா?

இந்தியா சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’மத்தியப் பிரதேசத்தில் காதலியை கொடூரமாக அடித்து உதைத்த காதலன் ஒரு முஸ்லீம், அவன் பெயர் அப்துல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link l Archived Link 

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். 

உண்மை அறிவோம்:

மேலே குறிப்பிட்டுள்ள சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில், ரேவா என்ற பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்ததாகும். பங்கஜ் திரிபாதி என்ற 24 வயது நபர் தான் காதலித்த பெண் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால், அந்த பெண்ணை ஈவு இரக்கமின்றி கொடூரமாக அடித்து உதைத்தார். இதனை ஒருவர் வீடியோவாக படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர, மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த சூழலில், சம்பந்தப்பட்ட பங்கஜ் திரிபாதியை போலீசார் கைது செய்தனர். அத்துடன், இந்த சம்பவம் பற்றி வெளியே தெரியவந்ததும், உடனடியாக, பங்கஜ் வீட்டை மத்தியப் பிரதேச மாநில அரசு தரப்பில், புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தெரிவித்தார். 

அத்துடன், தலைமறைவாக இருந்த அந்த நபரையும் உடனடியாக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட நபர் ஒரு முஸ்லீம் என்றும், அவரது பெயர் அப்துல் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள். உண்மையில், அவர் இந்து; அவரது பெயர் பங்கஜ் திரிபாதி. அவர் காதலித்த அல்லது அவரை காதலித்த பாவத்திற்காக அடி, உதை வாங்கிய அந்த பெண்ணும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான். இதுபற்றி அனைத்து ஊடகங்களிலும் ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

TimesOfIndia link l IndiaToday link 

இதுதொடர்பாக நமது இந்தி பிரிவு நடத்திய ஃபேக்ட்செக் ஒன்றும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Factcrescendo hindi link 
முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:FactCheck: மத்தியப் பிரதேசத்தில் காதலியை அடித்து உதைத்த முரட்டு காதலன் இந்துவா, முஸ்லீமா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: MISLEADING

Leave a Reply