ஸ்டாலின் நெசவு செய்வது போல் போஸ் கொடுத்த இடத்தில் ஜெயலலிதா படம் இருந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலின் கைத்தறி செய்வது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைக்கு மேல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இருப்பதாக வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்துக்கு மேல், "நல்லா வேஷம் போடுற. ஆனா, மண்டைக்கு மேல இருக்கற கொண்டைய மறந்துட்டியே" என்று டைப் செய்யப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், "கண்ணா கொஞ்சம் மேல பாரு நீ படிக்கிற school ல நாங்க Head master" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, *AIADMK IT WING* என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Bhuvaneshwaran R என்பவர் 2021 மார்ச் 6ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஸ்டாலின் தலைக்கு மேல் ஜெயலலிதா படம் இருப்பது ஒன்றும் மோசமான, அவமரியாதையான, அவமானத்தை ஏற்படுத்தும் செயல் இல்லை. ஜெயலலிதா படம் உள்ள இடத்துக்கு, வீட்டுக்கு ஸ்டாலின் போகவேக் கூடாது என்றும் இல்லை. உண்மையில் ஸ்டாலின் தலைக்கு மேல் பகுதியில் ஜெயலலிதா படம் இருந்ததா, என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2019ம் ஆண்டு நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது நெசவாளர்களிடம் வாக்கு சேகரித்த ஸ்டாலின் என்று சில ட்வீட் பதிவுகள் கிடைத்தன. அவற்றில் எதிலும் ஜெயலலிதா படம் இல்லை.

Archive

தொடர்ந்து தேடியபோது, இந்த கைத்தறி நெசவு செய்யும் படத்தை வைத்து ஸ்டாலினைக் கிண்டல் செய்து மீம்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அதில் கூட ஜெயலலிதா படம் இல்லை. ஸ்டாலினைக் கிண்டல், நக்கல் செய்து வெளியிடப்பட்ட படத்தில் ஜெயலலிதா படத்தை நீக்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, உண்மையில் அந்த இடத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

https://twitter.com/vanamadevi/status/1125364529129377792

Archive

வேறு ஆதாரங்கள், வீடியோக்கள் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி யூடியூபில் தேடினோம். அப்போது, திருப்பரங்குன்றத்தில் நெசவாளர்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட வீடியோ கிடைத்தது. அதைப் பார்த்தோம். அதில் ஜெயலலிதா படம் இல்லை என்பதைத் தெளிவாகக் காண முடிந்தது.

Youtube Link

இதன் அடிப்படையில், 2019ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தில் நெசவாளர்களிடம் வாக்கு சேகரித்தபோது எடுத்த படத்தை எடிட் செய்து, ஜெயலலிதா படத்தை வைத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த படம் திருத்தம் செய்யப்பட்டது என்று முடிவாகிறது.

முடிவு:

ஸ்டாலின் நெசவு செய்வது போன்ற புகைப்படத்தில் அவரது தலைக்கு மேல் ஜெயலலிதா புகைப்படம் உள்ளது என்று பகிரப்படும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஸ்டாலின் நெசவு செய்வது போல் போஸ் கொடுத்த இடத்தில் ஜெயலலிதா படம் இருந்ததா?- ஃபோட்டோஷாப் ஜாலம்

Fact Check By: Chendur Pandian

Result: Altered