சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தபின் ஆளுநர் ரவி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினாரா?
‘’ சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தபின் ஆளுநர் ரவி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link l Archived Link
உண்மை அறிவோம்:
சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும்போது, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதுதொடர்பான வீடியோ மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பரவின.
இந்த சூழலில், சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதும், ஆளுநர் ரவி தேசிய கீதத்திற்கு நின்று மரியாதை செலுத்தினார் என்று குறிப்பிட்டு, Desam News என்ற ஊடகம் முதலில் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைப் பார்த்தே, பலரும் மேற்கண்ட வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இதன்பேரில், Desam News என்ற youtube பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவைக் கீழே இணைத்துள்ளோம்.
ஆனால், இந்த வீடியோ செய்தி மிகவும் தவறாகும். ஏனெனில், ஆளுநர் ரவி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு ஜனவரி 09, 2023 அன்று காலை சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக எடுக்கப்பட்டதாகும்.
ஆம். அந்த வீடியோ மற்றும் செய்தி கீழே தரப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகே, கூட்டத்தொடர் தொடங்கி, ஆளுநர் உரை நிகழ்த்தினார். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பாக தயாரித்து கொடுக்கப்பட்டிருந்த உரையை முறையாகப் படிக்காமல், ஆளுநர் ரவி தவிர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், அவருக்கு கண்டனம் தெரிவித்து, தீர்மானம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது, கோபமடைந்த ஆளுநர் ரவி அவையை விட்டு வெளியேறினார்.
அவை நிகழ்வு தொடர்பான முழு வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
இதுபற்றி திமுக தரப்பிலும் கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
எனவே, இரு வெவ்வேறு நிகழ்வுகளை ஒன்றிணைத்து, மேற்கண்ட வகையில் தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று சந்தேகமன்றி உறுதி செய்யப்படுகிறது. இதன்படி, ஜனவரி 9, 2023 அன்று காலை சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக, ஆளுநருக்கு தேசிய கீதம் இசைத்து, காவல்துறையினர் மரியாதை அளித்த வீடியோவை எடுத்து, அவையில் இருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் வெளியே வந்து தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு சென்றார் எனக் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
https://api.whatsapp.com/send?phone=9049053770
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தபின் ஆளுநர் ரவி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: MISSING CONTEXT