‘’மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல’’ என்று மோடி பற்றி குஷ்பு விமர்சனம் செய்ததாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’ என்னக்கா ஜி மேலயே அட்டாக்கா😱😱!’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் நியூஸ் கார்டு ஒன்றையும் இணைத்துள்ளனர். அதில், ‘’என்னை பொறுத்த வரை.. மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல- நடிகை குஷ்பூ,’’ எனவும் எழுதப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு நடிகை குஷ்பு, மோடியை விமர்சித்துப் பேசியுள்ளது போன்று உள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் நேரடியாக, குஷ்பு தரப்பை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இது தவறான தகவல். சினிமா பிரபலங்கள் அடிக்கடி விவாகரத்து செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சமீபத்தில் கூட நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனை மனதில் வைத்து, குஷ்பு அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். மற்றபடி, இதில் அரசியல் எதுவும் இல்லை. வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக இவ்வாறு தகவல் பரப்புகிறார்கள்,’’ என்று குறிப்பிட்டனர்.

குஷ்பு வெளியிட்ட X பதிவு லிங்க்…

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

NewsTamil 24X7 l Dinamalar Link l Cinema Vikatan

எனவே, குஷ்பு வெளியிட்ட பதிவை தவறாகப் புரிந்துகொண்டு சிலர் குஷ்பு மோடியை விமர்சித்துவிட்டார் என்று கூறி, வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல- மோடி மீது குஷ்பு விமர்சனம்!
Claimed By :  Social Media User
Fact Check :  MISLEADING