‘’ஆவின் தயாரிப்புகளில் நெய்க்குப் பதிலாக டால்டா கலக்கப்படுகிறது,’’ என்று பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Archived Link

இந்த ட்விட்டர் பதிவில் தினமலர் நாளிதழ் பெயருடன் உள்ள நியூஸ்கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

ஆவின் தயாரிக்கும் பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்புகள், இனிப்பு வகைகள் தமிழக மக்களிடையே பிரபலம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், ஆவின் தயாரிக்கும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக, வனஸ்பதி எனப்படும் டால்டா சேர்க்கப்படுவதாகக் கூறி தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அந்த லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

Archived Link 1 I Archived Link 2

இதன்படி, மேற்கண்ட பதிவில் உள்ளதுபோல, தினமலர் செய்தி வெளியிட்டது உண்மையே.

ஆனால், இந்த செய்தி பல்வேறு தரப்பிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி உடனடியாக ஆவின் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

ஆவின் வெளியிட்ட மற்றொரு ட்வீட் லிங்க் கீழே தரப்பட்டுளளது.

இதுதவிர அவர்கள் வெளியிட்ட ஊடகச் செய்திக்குறிப்பும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆவின் தயாரிப்புகள் பற்றி உண்மைக்கு மாறாகச் செய்தி வெளியிட்டதற்காக, தினமலர் நாளிதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறிப்பிட்ட நாளிதழுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலாக மாறியுள்ளதால், நாம் இதில் தனிப்பட்ட கருத்து கூற ஏதுமில்லை.

மேலும், ஆவின் நிர்வாகம் உரிய விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த செய்தியை மேற்கொண்டு சமூக வலைதளங்களில் பகிர்வது மற்றவர்களை குழப்பக்கூடியதாக அமையும். அத்துடன், தவறான தகவலை பகிர்ந்ததற்காக, ஆவின் நிர்வாகம் உங்கள் மீதும் கூட சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:Explainer: ஆவின் தயாரிப்புகளில் டால்டா கலக்கப்படுகிறதா?

By: Fact Crescendo Team

Result: Explainer