ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் கடல் போல திரண்ட மக்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் கேமிராவில் படம்பிடிக்க முடியாத அளவுக்கு கடல் போல திரண்ட மக்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தை நாம் கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடியபோது, இதேபோன்ற புகைப்படம் 2020ம் ஆண்டிலேயே ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதாக, விவரம் கிடைத்தது. அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. எனினும், நாம் ஆய்வு செய்யும் புகைப்படம் சற்று கேமிரா கோணம் மாறுபடுகிறது.

இதன்படி, நைஜீரியா நாட்டில் Reinhard Bonnke, (the founder of Christ for all Nations) என்பவர் அவ்வப்போது கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வுகளை நடத்தி வருகிறார். அவர் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் தொடர்ச்சியாக நடத்தும் இந்த கூட்டுப்பிரார்த்தனை நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்கள் அவரது இணையதளத்திலேயே காண கிடைக்கின்றன. அதில், ஒரு புகைப்படத்தை எடுத்தே மேற்கண்ட வகையில் தகவல் பரப்பி வருகின்றனர்.

நாம் ஆய்வு செய்யும் புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும். அதற்குரிய லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

web.archive.org link

எனவே, நைஜீரியாவில் நிகழ்ந்த கிறிஸ்தவ மத போதனை நிகழ்வு தொடர்பான பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து, Bharat Jodo Yatra உடன் தொடர்புபடுத்தி வதந்தி பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

இதுபற்றி நமது மலையாள மொழிப் பிரிவினர் வெளியிட்ட ஃபேக்ட்செக் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Malayalam Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் கடல் போல திரண்ட மக்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By:  Fact Crescendo Team 

Result: False