2018-ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டனரா?

அரசியல் இந்தியா

‘’2018ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

Kingdom Joker – பாணபத்திர ஓணாண்டி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஜெயா பிளஸ் ஊடகம் வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

Facebook Claim Link Archived Link 

உண்மை அறிவோம்:
ஜெயா பிளஸ் போல வேறு யாரேனும் செய்தி வெளியிட்டுள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது நிறைய பேர் இதே தகவலை உண்மை என நம்பி வைரலாக தகவல் பரப்புவதை காண நேரிட்டது.

ஆனால், ஜெயா பிளஸ் செய்தியில் முழு உண்மை இல்லை. ஆம், இதே செய்தியை மற்ற ஊடகங்கள் எப்படி வெளியிட்டுள்ளன என்பதற்கான ஆதாரத்தை கீழே இணைத்துள்ளோம். 

The Hindu LinkIndiaToday Link NDTV Link FirstPost Link 

இதன்படி 2018ம் ஆண்டில் இந்திய அளவில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கைதான் 1,34,516 ஆகும். இதில், வேலையின்மையால் தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 12,936 மட்டுமே, இதேபோல சுயதொழில் செய்து ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 13,149 ஆகும். மற்ற ஆண்டுகளைவிட, வேலையின்மையால் தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 2018ம் ஆண்டில்தான் அதிகமாகும்.

இதுதொடர்பாக, NCRB எனப்படும் தேசிய குற்ற ஆவண பிரிவின் அதிகாரப்பூர்வ அறிவிக்கையின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

Ncrb.gov.in 2018 PDF Data Link

2018ம் ஆண்டில் இவ்வளவு தற்கொலைகள், இதற்கு பாஜக அரசுதான் காரணம் என்றும் போகிற போக்கில் குற்றம்சாட்டிவிட முடியாது. ஏற்கனவே, இதுபோல அதிகளவிலான தற்கொலைகள் இந்தியாவில் நிகழ்ந்திருக்கின்றன. வேலையின்மை தொடங்கி பலவித காரணங்கள் இதற்கு அடிப்படையாக உள்ளன. 

Ncrb.gov.in 2015 PDF Data Link

எனவே, 2018ம் ஆண்டில் இந்திய அளவில் தற்கொலை செய்துகொண்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை தவறாக புரிந்துகொண்டு, வேலையின்மையால் இவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டதாக, ஜெயா பிளஸ் ஊடகம் செய்தி பகிர்ந்துள்ளது என்று தெளிவாகிறது. மேலும், பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் முழு உண்மையை வெளியிடாமல், ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியதாகவும் உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட செய்தியில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:2018-ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டனரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •