கோவையில் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபடுகிறார் அஜித்: பில்டப் தரும் ஃபேஸ்புக் செய்தி

சினிமா

‘’கோவையில் முகாம் அமைத்து நடிகர் அஜித் பயிற்சியில் ஈடுபடுகிறார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

RARE tamil VIDEO என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 31, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், அஜித் மற்றும் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’#24INFO தோனியை தொடர்ந்து நாட்டிற்காக களத்தில் இறங்கினார் அஜித் கோவையில் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபடுகிறார்,’’ என எழுதியுள்ளனர். அதன் கீழே, TheDailyTamil என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தரப்பட்டுள்ள செய்தி லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அது இணையதள செய்தி ஒன்றை திறந்து காட்டியது. அந்த செய்தியில் பாதி விவரம்தான் இருந்தது. மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் என்று கூறி மற்றொரு இணையதளத்தின் லிங்கை அதில் சேர்த்திருந்தார்கள். 

News Link I Archived Link

இதன்படி, அந்த லிங்கை கிளிக் செய்தபோது, அது https://tnnews24.com/ என்ற மற்றொரு இணையதளத்தின் செய்தியை திறந்து காட்டியது. விக்கிரமாதித்தன், வேதாளம் கதை போல இப்படி லிங்க் மேல லிங்காக பகிர்ந்து சித்து வேலை காட்டியிருக்கிறார்கள். அந்த செய்தியின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது. 

News Link I Archived Link

இதன்படி, செய்தியின் தலைப்பில், ‘’தோனியை தொடர்ந்து நாட்டிற்காக களம் இறங்கினார் அஜித் கோவையில் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபடுகிறார்,’’ என எதோ பயங்கர பில்டப் கொடுத்துள்ளனர். ஆனால், செய்தியின் உள்ளே, சமீபத்தில் கோவையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டிக்கான தகுதிப் போட்டியில் அஜித் பங்கேற்றார் எனக் கூறியுள்ளனர். இதன்படி, அஜித் தனிப்பட்ட முறையில் முகாம் அமைத்து எதோ பயங்கர பயிற்சியில் ஈடுபடவில்லை. தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் பங்கேற்க கோவை சென்றிருக்கிறார். போட்டி முடிந்ததும் அன்றைய நாளே கோவையில் இருந்து கிளம்பிவிட்டார். இவ்வளவுதான் விசயம். இது முழுக்க முழுக்க தமிழக அளவிலான துப்பாக்கிச் சுடும் வீரர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியாகும். அஜித் சொந்தமாக எதுவும் பயிற்சி முகாம் நடத்தவில்லை. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியின் தலைப்பு தவறாகவும், வாசகர்களை குழப்பக்கூடியதாகவும் உள்ளதென உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல் வாசகர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கோவையில் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபடுகிறார் அஜித்: பில்டப் தரும் ஃபேஸ்புக் செய்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •