வானதி ஸ்ரீனிவாசனை கேள்வி கேட்ட பா.ரஞ்சித்: உண்மை அறிவோம்!

அரசியல் சினிமா

‘’வானதி ஸ்ரீனிவாசனை கேள்வி கேட்ட பா.ரஞ்சித்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பிரியாணி சட்டி – Biriyani Satti எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை டிசம்பர் 4, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் தனியார் வீட்டைச் சுற்றி எழுப்பப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அதன் பின்புறம் வசித்து வந்த வீடுகள் நொறுங்கின. இதில், 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Hindu Tamil LinkBBC News Link Dinamalar Link 

இதையொட்டி, பலரும் கருத்து தெரிவித்தனர். அதில், சினிமா இயக்குனர் பா.ரஞ்சித், சாதி உணர்வால் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் அது எனக் கூறி காரசாரமாக விமர்சித்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார்.

Archived Link

இதேபோல பா.ரஞ்சித், கோவை சுற்றுச்சுவர் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட மற்ற ட்விட்களின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Pa Ranjith Twitter Post 1Archived Link
Pa Ranjith Twitter Post 2Archived Link
Pa Ranjith Twitter Post 3Archived Link
Pa Ranjith Twitter Post 4Archived Link

ரஞ்சித் வெளியிட்ட கருத்துக்கு பதிலடி தரும் வகையில், பாஜக தமிழக நிர்வாகிகளில் ஒருவரான வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இதற்கு ரஞ்சித் பதில் எதுவும் அளிக்கவில்லை. இதுபற்றி ரஞ்சித் பிஆர்ஓ.,விடம் விளக்கம் கேட்டோம். அதற்கு அவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, வானதி ஸ்ரீனிவாசனுக்கு பதில் கேள்வி எதுவும் ரஞ்சித் எழுப்பவில்லை என, மறுப்பு தெரிவித்துவிட்டார். 

எனவே, பா.ரஞ்சித் சொல்லாததை சொன்னதுபோல, அவரது ஆதரவாளர் என்ற மனப்பான்மையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் கருத்து பகிர்ந்திருக்கிறார் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:வானதி ஸ்ரீனிவாசனை கேள்வி கேட்ட பா.ரஞ்சித்: உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False