லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பார்க்க நடிகை பூனம் பஜ்வா போல் இருந்த அந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Poonam Bajwa 2.png

Facebook Link I Archived Link

பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. நிலைத் தகவலில், "34 வயசு விதவை நான். லண்டன்ல இருக்கிறேன். என்னைப் பிடித்தால், உங்களுக்கு சம்மதம் என்றால் மட்டும் தொடர்பு கொள்ளவும்.#குரூப்ல_ஷேர் பண்ணா என் நம்பர் உங்க இன்பாக்ஸ் வரும். *ரோகினி" என்று இருந்தது.

இந்த பதிவை, PS.Vithusa - விதுஷா என்பவர் 2019 ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த பதிவைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகையின் படத்தைப் பயன்படுத்தி ஆபாசமான கருத்தைப் பரப்பி வருவது போல இந்த பதிவு இருந்தது. படத்தில் இருப்பது நடிகை பூனம் பஜ்வா போல தெரிந்தது. அதை உறுதி செய்ய இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், இதே படம் இணையத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தேடல் முடிவு நமக்குக் கிடைத்தது. ஆனால், இந்த படத்தைப் போல இருக்கும் படங்கள் என்று நடிகை பூனம் பஜ்வா படத்தை நமக்குக் காட்டியது.

Poonam Bajwa 2A.png

Search Link

வேறு ஒரு தேடு தளத்தில் இந்த படத்தைத் தேடினோம். அப்போது சில பக்கங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது தெரிந்தது. ஆனால், அதில் யார் இவர், இந்த புகைப்படம் எப்போது பதிவேற்றம் செய்யப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை.

Poonam Bajwa 3.png

Search Link

இதன் நடுவே, ட்விட்டரில் ஒருவர் இந்த படத்தைப் பதிவேற்றம் செய்திருந்தது தெரிந்தது. 2015ம் ஆண்டு ஆகஸ்ட் இந்த படத்தை அவர் பதிவேற்றம் செய்திருந்தார். ஆனால், யார் இவர் என்று அதில் அவர் குறிப்பிடவில்லை. அவர் பூனம் பஜ்வாவின் விசிறி என்பது மட்டும் தெரிந்தது. தொடர்ந்து பூனம் பஜ்வா வெளியிட்ட ட்வீட், அவருடைய படங்களை இவர் ஷேர் செய்து வந்தது தெரிந்தது. இருப்பினும் இது மட்டுமே இவர் பூனம் பஜ்வா என்பதை முடிவு செய்ய போதுமான ஆதாரமாகக் கருத முடியவில்லை.

https://twitter.com/dineshdhiman76/status/628937499532890112

Archived Link

இதனால், பூனம் பஜ்வாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் உள்ளதா என்று தேடினோம். மேலே உள்ள ட்வீட்டில் அந்த படம் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேர் செய்யப்பட்டு இருந்ததால், அதுவரை பின்னோக்கி சென்று தேடினோம். அப்போது பூனம் பஜ்வா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தது நமக்குக் கிடைத்தது. பூனம் பஜ்வா படத்தை படுத்து, லண்டன் விதவை என்று தவறாக குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

Archived Link

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்ட PS.Vithusa - விதுஷா பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. அவருடைய பதிவுகளைப் பார்த்தோம். எல்லாப் பதிவுகளுமே, பெண்களின் படத்தைப் பகிர்ந்து, பிடித்திருந்தால் இதை ஷேர் செய்யுங்கள்… அந்த பெண்ணின் நம்பர் உங்கள் இன்பாக்சுக்கு வரும் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. உண்மையில் இந்த பெண்கள் யார் என்று தெரியவில்லை. பெண்களைப் பற்றி தொடர்ந்து தவறான பதிவுகளை இந்த பக்கம் வெளியிட்டு வருவது மட்டும் தெரிந்தது.

Poonam Bajwa 4.png

பாலியல் தேவைக்காக சமூக ஊடகங்களுக்கு வரும் சிலரை குறிவைத்து இதைப் போன்று பல பதிவுகள் வெளியாகிறது. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் இது பற்றி பல கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஃபேக்ட் கிரஸண்டோ வெளியிட்ட கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன் உண்மைத்தன்மை புரியாமல் பலர் போன் நம்பர் கொடுத்து, சாட்டிங், டேட்டிங் வரை சென்று, பணத்தை இழந்து பரிதவிப்பதும் தொடர்கதையாக உள்ளது. எனவே, சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் பாலியல் இச்சை நோக்கில் எதையும் பார்க்காமல், சிறிது முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், இத்தகைய ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் தப்பிக்கலாம்.

நம்முடைய ஆய்வில், படத்தில் இருப்பவர் பூனம் பஜ்வா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், லண்டனில் உள்ள விதவை என்றும் இவருடைய பெயர் ரோகிணி என்றும், இவரைத் தொடர்புகொள்ள இந்த பதிவை ஷேர் செய்ய வேண்டும் என்றும் விஷமத்தனத்துடன் பொய்யான தகவல் பதிவிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:லண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா?– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்!

Fact Check By: Chendur Pandian

Result: False