ரஷ்ய நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதா?

அரசியல் உலகச் செய்திகள்

‘’ரஷ்ய நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் உள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

வீரன் சு.பாரதிராஜன் என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், புடின் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் உள்ளது. மேலே, காமராஜர் புகைப்படம் இருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தின் மேலே, ‘’ தமிழ்நாடு சட்டமன்றத்துல இவர் படம் இவர் படம் இருக்கா இல்லையானு தெரியல….. ரஷ்ய நாடாளுமன்ற அலுவலகத்தில் காமராஜர் ஐயா படம் உள்ளது!! #படிக்காதமேதை,’’ என தலைப்பிட்டு எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படத்தில் கூறியுள்ளதுபோல, உண்மையிலேயே ரஷ்யா நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதா, என கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது தவறான தகவல் என தெரியவந்தது.

மேற்குறிப்பிட்ட புகைப்படத்தை பலரும் பலவிதமாக பகிர்ந்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த காமராஜர் புகைப்படம் இருப்பது போன்ற தகவலும். உண்மையில், இந்த புகைப்படம் புடின் தலைமையில் நடைபெற்ற ரஷ்ய அமைச்சரவைக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டதாகும். இதுபோல பலமுறை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். உதாரணமாக, புடின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் புகைப்படம் ஒன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்தால் புதின் தலைக்கு மேலே எந்த புகைப்படமும் கிடையாது. ரஷ்ய அரசு இலட்சினை போன்ற ஒன்று மட்டும் உள்ளது. அந்த இடத்தில் காமராஜர் புகைப்படம் இருப்பது போல சித்தரித்துள்ளனர் என தெளிவாகிறது.

இதுதவிர, தமிழக சட்டமன்றத்தில் காமராஜர் புகைப்படம் இல்லை என, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார். இது தவறான தகவல். தமிழக சட்டமன்றத்தில் காமராஜர் உள்பட பலரது புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, ரஷ்ய நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் என்பது தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்பட பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ரஷ்ய நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False