திரைப்பட நடிகை ஷகிலாவுடன் மாலையும் கழுத்துமாக டாக்டர் ராமதாஸ் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Dr Ramadoss 2.png
Facebook LinkArchived Link

டாக்டர் ராமதாஸ் மற்றும் நடிகை ஷகிலா மாலையும் கழுத்துமாக உள்ளது போன்று படம் உள்ளது. இருவருக்கும் நடுவே டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளார். எடிட் செய்யப்பட்டது தெளிவாகத் தெரிகிறது.

இந்த பதிவை, ராஜ லிங்கம் என்பவர் 2019 அக்டோபர் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க, பா.ம.க தலைவர்களுக்கு இடையே மிகக் கடுமையான அறிக்கைப் போர் நடந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது உள்பட சில உறுதிமொழிகளை அளித்தார். இதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதனால், இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே சமூக ஊடகங்களில் கருத்து சண்டை நடந்து வருகிறது.

dinamalar.comArchived Link 1
vikatan.comArchived Link 2

மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸை விமர்சித்து கேலி சித்திரங்கள், விஷம மார்ஃபிங் படங்கள் சமூக ஊடகங்களில் இரு கட்சித் தொண்டர்களாலும் மாற்றி மாற்றி பரப்பப்படுகிறது. அந்த வகையில் டாக்டர் ராமதாஸ் பிரபல நடிகை ஷகிலாவை திருமணம் செய்து கொண்டது போன்ற மார்ஃபிங் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தலையை மட்டும் மார்ஃபிங் செய்திருப்பது தெரிகிறது. இருப்பினும் இழிவுபடுத்தும் நோக்கில் இந்த புகைப்படத்தைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Dr Ramadoss 3.png
Search Linksathriyangopinath.blogspot.comArchived Link

மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, டாக்டர் ராமதாஸ் அவரது துணைவியார் சரஸ்வதி ஆகியோருடன் அன்புமணி இருக்கும் புகைப்படம் சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. 2013ம் ஆண்டு ஒரு பிளாக்கில் இந்த புகைப்படம் பதிவேற்றப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இந்த புகைப்படத்தை எடுத்து விஷமத்தனமாக எடிட் செய்து பகிர்ந்து வருவது தெரிந்தது. இதன் அடிப்படையில், இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சித்தியுடன் சின்னையா? ஃபேஸ்புக் விஷம புகைப்படம்

Fact Check By: Chendur Pandian

Result: False