மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராஜன் திமுக உறுப்பினர்கள் இல்லை!
‘’மொழிப் போர் தியாகிகள் நடராஜன், தாளமுத்து இருவரும் திமுகவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் பற்றி ஆராய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
உண்மை அறிவோம்:
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். இவரது மறைவை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல விதமான வதந்திகள் பரவின. அவை பற்றி நாமும் உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளோம்.
இதையொட்டி பரவிய மற்றொரு வதந்திதான், மேற்கண்ட ஃபேஸ்புக் தகவலும்…
இதனை முதலில் வெளியிட்டவர் Don Ashok என்ற ட்விட்டர் பயனாளர் ஆவார்.
இவரது பதிவு பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்திய தொடர்ந்து, இதுபற்றி தவறான தகவலை வெளியிட்டதற்காக வருந்துகிறேன் என்று கூறி மீண்டும் Don Ashok மற்றொரு ட்வீட்டை வெளியிட்டார்.
அதாவது வதந்தியை பரப்பியவரே பிறகு, தனது தவறை ஒப்புக் கொண்டு, வாபஸ் பெற்றுவிட்டாலும், அந்த தகவலை இன்னும் பலர் உண்மை என்றே நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மையில், நடராஜன் – தாளமுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று தியாகிகளாக மாறியது 1937- 1939 காலக்கட்டத்தில் ஆகும்.
இவர்களின் மரணம்தான், மொழிப் போராட்டத்தை தமிழகத்தில் மிகவும் தீவிரப்படுத்தியது. ஆனால், இவர்கள் திமுக.,வைச் சேர்ந்தவர்கள் கிடையாது. தமிழ் மொழி ஆர்வலர்களாகவே போற்றப்படுகின்றனர்.
1937-40 காலக்கட்டத்தில் திமுகவும் கிடையாது, திராவிடர் கழகமும் கிடையாது. அப்போது, நீதிக்கட்சியில்தான் பெரியார் கூட செயல்பட்டு வந்தார். 1944ம் ஆண்டில்தான் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தனர்.
அதன் பிறகுதான், திராவிடர் கழகத்தில் கருத்து வேறுபாடு எற்பட்டு, அண்ணா உள்ளிட்டோர் 1949ம் ஆண்டில் திமுகவை தொடங்கினர்.
எனவே, 1937-40 காலக்கட்டத்தில் மொழிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக தெரிகிறது. இந்த தவறை புரிந்துகொண்டு முதலில் இதனை பரப்பிய டான் அசோக் என்பவரே, தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். ஆனாலும், சிலர் இன்னமும் இதனை உண்மை போல பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், எமர்ஜென்சி காலக்கட்டத்தில் சிட்டிபாபு மற்றும் தற்போதைய கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் ஜெ.அன்பழகன் போன்றோரை திமுக இழந்துள்ளது உண்மைதான்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் தகவலில் கூறியுள்ள தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராஜன் திமுக உறுப்பினர்கள் இல்லை!
Fact Check By: Pankaj IyerResult: False