பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற வாகனம் மீது கல்வீசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

பிரதமர், குடியரசுத் தலைவர் செல்லும்போது வாகனங்கள் அணிவகுத்து செல்லும். அதுபோன்ற வாகன அணிவகுப்பு ஒன்றின் மீது கல்வீசி தாக்கப்படுகிறது. பதிலுக்கு போலீசாரும் கல் வீசி தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த அமித்ஷா சென்ற வாகனம் மீது பொது மக்கள் கல்வீச்சு, ஊடகங்களால் மறைக்கப்பட்ட செய்தி”என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sardar Abdullah என்பவர் ஜூன் 21ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடு முழுக்க ஊரடங்கு உள்ளது. தலைவர்கள் மிகப் பெரிய அளவில் சுற்றுப் பயணங்கள் எதையும் மேற்கொள்வது இல்லை. சமீபத்தில் பீகாரில் கிராமங்கள் தோறும் தொலைக்காட்சிகள் வைத்து அமித்ஷா பேசிய காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்த நிலையில் அமித்ஷா வாகனம் தாக்கப்பட்டதாக பகிர்ந்து வருகின்றனர். எப்போது இந்த சம்பவம் நடந்தது என்றும் குறிப்பிடவில்லை.

வீடியோவில் உள்ள பொது மக்கள், போலீசார் என யாரும் மாஸ்க் அணியவில்லை, எனவே பழைய வீடியோவை எடுத்து வைரல் ஆக்கி வருகிறார்களா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

அமித்ஷா வாகனம் தாக்கப்பட்டது என்றால் அதுதான் இந்தியா முழுக்க உள்ள ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கும். அப்படி இருக்கும்போது எந்த ஒரு ஊடகமும் மறைக்க வேண்டியது இல்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள ஊடகங்கள் மறைத்தாலும் எதிர்க்கட்சி ஊடகங்கள் குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகளால் நடத்தப்படும் ஊடகங்களிலாவது இந்த தகவல் வெளியாகி இருக்க வேண்டும். அமித்ஷா பீகார் சென்றது தொடர்பாக அப்படி ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம்.

நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. கடைசியாக ஜூன் முதல் வாரத்தில் நடந்த டிஜிட்டல் பிரசாரம் பற்றிய செய்தி மட்டுமே கிடைத்தது.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 2018ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி நியூஸ் 18 வெளியிட்ட வீடியோ பதிவு கிடைத்தது. அதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சென்ற வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மக்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும், நியூஸ்18 செய்தியில் இடம் பெற்றிருந்த வீடியோவும் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டதாக  இருந்தது. 

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fcnnnews18%2Fvideos%2F10157040256924202%2F&show_text=0&width=560″ width=”560″ height=”315″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowTransparency=”true” allowFullScreen=”true”></iframe>

Archived Link

இதன் அடிப்படையில் பீகார் முதல்வர் வாகன அணிவகுப்பில் கல் வீச்சு என்று டைப் செய்து தேடியபோது 2018ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி ஏஎன்ஐ செய்தி ஊடகம் வெளியிட்ட வீடியோ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி என பல ஆதாரங்கள் நமக்கு கிடைத்தன.

hindustantimes.comArchived Link

இதன் மூலம் 2018ம் ஆண்டு பீகார் முதல்வர் சென்ற வாகனத்தின் மீது கல்வீசி நடந்த தாக்குதல் வீடியோவை எடுத்து, பீகார் சென்ற அமித்ஷா வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், இதை ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மறைத்துவிட்டன என்று தவறாக தகவல் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

2 thoughts on “பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி!

  1. நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று பதியும் நீங்கள் குஜராத் மாடல் சொல்லும் போது வளர்ச்சி இல்லை மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று ஏன் உண்மை மக்களுக்கு சொல்லவில்லை.

Comments are closed.