பாஜக முன்னாள் அமைச்சர் பங்கஜ முண்டே தேர்தல் தோல்வியில் கதறி அழுதாரா?

அரசியல் | Politics சமூக வலைதளம்

‘’தேர்தல் தோல்வியால் கதறி அழுத மகாராஷ்டிர அமைச்சர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1News18 Tamil Link Archived Link 2

இதுபற்றி ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபொழுது, ஒரே செய்தியை 3 முறை நியூஸ்18 தமிழ் ஊடகம் பகிர்ந்திருந்த விவரம் கிடைத்தது. அத்துடன், தனிநபர் ஒருவரும் பகிர்ந்திருந்தார். 

Facebook Link 1Archived Link 1Facebook Link 2Archived Link 2

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதுபோல, பங்கஜ முண்டே தேர்தல் தோல்வியால் ஒன்றும் கதறி அழவில்லை. மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ம் தேதிதான் வெளியிடப்பட்டன. இதில், பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்ற நிலையில், அதன் மூத்த தலைவர்கள் சிலர் தோல்வி அடைந்தனர். குறிப்பாக, பாஜக.,வின் அழகான பெண் அமைச்சர் என வர்ணிக்கப்பட்டு வந்த பங்கஜ முண்டே காங்கிரஸ் கட்சி வேட்பாளராகக் களமிறங்கிய தனது நெருங்கிய உறவினரிடமே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

இந்நிலையில்தான், அவர் தேர்தல் தோல்விக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் கதறி அழுததாகக் கூறி ஃபேஸ்புக்கில் செய்தி பகிரப்படுகிறது. உண்மையில், அந்த வீடியோ எடுக்கப்பட்டது அக்டோபர் 20ம் தேதி ஆகும்.

அதாவது, மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக, டிவி9 மராத்திக்கு பேட்டி அளித்த பங்கஜ முண்டே, தன்னைப் பற்றிய கருத்து ஒன்றுக்கு சற்று மன வேதனையுடன் பதில் அளித்தார். அதன்போது அவரது முகபாவம் அழுவது போல காணப்பட்டது; ஆனால், அவர் உண்மையில் அழவில்லை. அதுபற்றிய வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட வீடியோவின் 1.40வது நிமிடத்தில் இருந்து பங்கஜ முண்டே விதவிதமான முகபாவம் காட்டுவதை பார்க்க முடியும். ஆனால், அவர் அழவில்லை. மனவேதனையை வெளிப்படுத்துகிறார், அவ்வளவுதான். 

இதுதொடர்பாக, The Quint வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பங்கஜ முண்டே பற்றிய வீடியோ, சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன் வெளியானதாகும்.
2) குறிப்பிட்ட வீடியோவில் பங்கஜ முண்டே கதறி அழவில்லை. மனவேதனையை வெளிப்படுத்தி பேசுகிறார்.
3) அக்டோபர் 20ம் தேதி வெளியான வீடியோவை, அக்டோபர் 24ம் தேதி நிகழ்ந்த தேர்தல் முடிவுகளுடன் தொடர்புபடுத்தி தவறான தகவலை சித்தரித்துள்ளனர்.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பாஜக முன்னாள் அமைச்சர் பங்கஜ முண்டே தேர்தல் தோல்வியில் கதறி அழுதாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False