FACT CHECK: அயோத்தி சாலை சந்திப்புகளில் தெய்வீக சின்னம்- புகைப்படம் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

அயோத்தியில் நான்கு சாலை சந்திப்பு பகுதிகளில் தெய்வீக சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு படம் சமூக ஊடகங்களில் பகரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த படம் அயோத்தியில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சாலையின் நடுவே காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள பழங்கால போர்க் கருவிகளின் பிரம்மாண்ட சிலைகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், அயோத்திமா நகரில் புதிதாக நாற்சந்தியில் அமைக்கப்பட்ட தெய்வீகமான சின்னம்..! இதே போல் பல ஹிந்து சிலைகள், தெய்வீகச் சின்னங்கள் பாலி நகரெங்கும் காணலாம்..!

நம்ம தமிழகத்தில் கண்ட கழிசடைகளையும் நாற்சந்தியில் பார்த்து வெறுத்துப் போன கண்களுக்கு இது பேரானந்தமாகக் காட்சியளிக்கிறது..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை ஆன்மீக களஞ்சியம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Vijaya Durai என்பவர் 2020 டிசம்பர் 2ம் தேதி பதிவிட்டுள்ளார். 

Vijaya Durai மட்டுமல்ல, அயோத்தியில் உள்ள பழங்கால போர் கருவிகள் என்று பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் நான்கு சாலை சந்திப்புகளில் தெய்வீக சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் அயோத்தியில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. ட்விட்டரில் ஒருவர் இந்த புகைப்படம் அயோத்தியில் எடுத்தது என்றே குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிறகு அவருக்கு நண்பர் ஒருவர் இந்த புகைப்படம் குஜராத் மாநிலம் வடோதராவில் எடுக்கப்பட்டது என்று கூறினாராம். அதனால் இந்த புகைப்படம் அயோத்தியில் எடுக்கப்பட்டது இல்லை, வடோதராவின் கதா சவுக் பகுதியில் எடுக்கப்பட்டது என்று திருத்தம் செய்து புதிய பதிவு வெளியிட்டிருந்தது கிடைத்தது.

Archived

இதன் அடிப்படையில் கூகுளில் வடோதரா, கதா சவுக், கதா சர்க்கிள் என்று வெவ்வேறு கீ வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது வடோதராவில் இந்த சிலை அமைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. கூகுள் மேப்பில் தேடிய போது அந்த இடம் கிடைத்தது. அந்த இடம் பற்றிய குறிப்பில் மிகப்பெரிய கதாயுதம் மற்றும் வில் அம்பு படத்தை சிலர் கூகுள் மேப்பில் பதிவேற்றம் செய்திருந்தனர். 

அசல் பதிவைக் காண: Google Map I Archive

மேலும், டிம்பர் மார்க்கெட் என்று முழு சாலை புகைப்படம் நமக்கு கூகுள் மேப்பில் கிடைத்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பிரம்மாண்ட கதை மற்றும் வில் அம்பு சிலை வடோதரா கதா சர்கிள் பகுதியில் அமைந்திருப்பது உறுதியானது. இந்த சிலை தற்போது அமைக்கப்பட்டது இல்லை என்பதும் 2016ம் ஆண்டில் இருந்தே இருப்பதும் தெரிகிறது.

தொடர்ந்து தேடியபோது dreamstime.com என்ற புகைப்படங்கள் விற்பனை செய்யும் தளத்தில் இந்த படம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், இந்த புகைப்படம் குஜராத் மாநிலம் வதோதராவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: dreamstime.com I Archive

இதன் மூலம் அயோத்தி நகரில் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் பழங்கால போர்க் கருவி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது. குஜராத் மாநிலம் வடோதராவில் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி என்று குறிப்பிடப்பட்டு, குழப்பியுள்ளனர்.

முடிவு:

அயோத்தியில் சாலை சந்திப்புகளில் பழங்கால போர்க் கருவிகள் சிலை அமைக்கப்பட்டு வருகிறது என்று பகிரப்படும் படம் குஜராத்தில் எடுக்கப்பட்டது என்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அயோத்தி சாலை சந்திப்புகளில் தெய்வீக சின்னம்- புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •