நடிகர் சூர்யா மற்றும் கவுண்டர் சமூகம் பற்றி கல்யாண ராமன் விமர்சித்தாரா?

அரசியல் தமிழ்நாடு

‘’காட்ட வித்து கள்ளு குடிச்ச நேரத்துல ஒழுங்கா இந்தி படிச்சிருந்தா நீட்ல பாஸாகியிருக்கலாம்,’’ என்று பாஜக ஆதரவாளர் கல்யாணராமன் கூறியதாகக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ட்வீட்டரில் சர்ச்சையான கருத்து பகிர்வதன் மூலமாக பிரபலமானவர் கல்யாண ராமன். பாஜக ஆதரவாளரான இவர், சிலருக்கு நேரடி மிரட்டலும் விடுப்பார். இதன்பேரில், இவரை பற்றி பலரும் காரசாரமாக விமர்சிப்பது வழக்கம்.

இந்நிலையில்தான் இவரை குறிப்பிட்டு மேற்கண்டவாறு சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. உண்மையில், இவர் இவ்வாறு கூறினாரா என்று அவரது ட்விட்டர் பக்கம் (@BjpKalyaan) சென்று தகவல் தேடியதில், எதுவும் காண கிடைக்கவில்லை.

இதையடுத்து, அவரை நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்தோம். அப்போது அவர், ‘’இப்படி எந்த கருத்தும் வெளியிடவில்லை. ஏற்கனவே ஒருமுறை சூர்யா, அவரது சகோதரர் கார்த்திக்கு நான் மிரட்டல் விடுத்ததாக ஒரு வதந்தி பரப்பினார்கள். அதுபோன்றதுதான் இதுவும். நடிகர் சூர்யா கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். ‘காடு வித்து கள்ளு குடிச்சவன் கவுண்டன்டா,’ என ஒரு பேச்சு வழக்கு உண்டு. அதனை அடிப்படையாக வைத்து கூடுதலாக என் பெயரையும் சேர்த்து இப்படி தகவல் பரப்புகிறார்கள்,’’ என்று மறுத்துவிட்டார்.

இதுதவிர குறிப்பிட்ட தகவலை fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அப்போது இது நன்கு எடிட் செய்யப்பட்ட தகவல்தான் என தெரியவந்தது. 

ஏற்கனவே கல்யாணராமன் பற்றி வெளியான போலி தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்து, அதன் உண்மைத்தன்மையை வெளியிட்டிருக்கிறோம். அதற்கான லிங்க் கீழே இணைத்துள்ளோம்.

FactCrescendo Tamil Link

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நடிகர் சூர்யா மற்றும் கவுண்டர் சமூகம் பற்றி கல்யாண ராமன் விமர்சித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False