கையில் மருதாணி வைத்த மாணவிக்கு அபராதம் விதித்த கிறிஸ்தவ ஸ்கூல்?

கல்வி சமூக வலைதளம்

‘’கையில் மருதாணி வைத்த மாணவிக்கு அபராதம் விதித்த கிறிஸ்தவ ஸ்கூல்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

Dumeels

எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சென்னை வேப்பேரியில் இயங்கும் Doveton Girls & Boys Hr.Sec.Schools பெயரில் ஒரு ரசீதின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இதன் மேலே, ‘கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் இந்து மாணவி கையில் மருதாணி வைத்துச் சென்றதற்காக ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்,’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
இவர்கள் சொல்வதுபோல, உண்மையில் இந்து மாணவிக்கு, டவுட்டன் பள்ளி நிர்வாகம் அபராதம் விதித்ததா என்ற சந்தேகத்தில் தகவல் ஆதாரம் தேடினோம். அப்போது, குறிப்பிட்ட சம்பவம் கடந்த 2015ம் ஆண்டில் நிகழ்ந்தது என்றும், அதில் பாதிக்கப்பட்டது மாணவி இல்லை, 2ம் வகுப்பு படித்த ஒரு சிறுவன்தான் என்றும் உண்மை தெரியவந்தது. ஆம், இதுதொடர்பாக, அப்போதே பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது.

Dinamani News LinkOneIndia News Link 

இதன்படி, டவுட்டன் பள்ளியின் பெயரில் வெளியிடப்பட்ட ரசீதில், மாணவனின் பெயர், வகுப்பு மற்றும் சம்பவம் நிகழ்ந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அதனை மறைத்துவிட்டு, இந்து மாணவி பாதிக்கப்பட்டார் எனக் கூறி, பழைய சம்பவத்தை புதிதுபோல தகவல் பரப்பி ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) இந்த சம்பவம் நிகழ்ந்தது 2015ம் ஆண்டாகும்.
2) இதில் பாதிக்கப்பட்டது மாணவி இல்லை. 2ம் வகுப்பு படித்த மாணவன்.
3) அபராதம் விதித்தது கிறிஸ்தவ பள்ளிக்கூடம் என்பது உண்மைதான்.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:கையில் மருதாணி வைத்த மாணவிக்கு அபராதம் விதித்த கிறிஸ்தவ ஸ்கூல்?

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •