கொரோனா வைரஸ் ஊரடங்கு; புதுக்கோட்டையில் மான்கள் சுற்றும் காட்சி உண்மையா?

Coronavirus சமூக ஊடகம் தமிழகம்

‘’கொரோனா வைரஸ் ஊரடங்கால் புதுக்கோட்டை தெருக்களில் மான்கள் சுற்றி திரியும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த பதிவை வெளியிட்டவர், இது நிச்சயமாக புதுக்கோட்டையில் நிகழ்ந்ததுதான் என்று நம்பிக்கையுடன் கூறுவதைக் காண முடிகிறது. அதனையடுத்து, உண்மை என நம்பி பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையிலேயே புதுக்கோட்டையில்தான் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகத்தில் இதனை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தோம். அப்போது, இதுபற்றி மார்ச் 31ம் தேதி வெளியான ட்விட்டர் பதிவு ஒன்றை கண்டோம். அந்த பதிவில், இந்த புகைப்படம் இலங்கையில் உள்ள திரிகோணமலை துறைமுக நகர்ப்பகுதியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். 

Twitter Post Link Archived Link 

இதன்பேரில், மேற்கண்ட புகைப்படம் திரிகோணமலையில் எடுக்கப்பட்டதுதானா என்ற சந்தேகத்தில் வித விதமான கீவேர்ட் பயன்படுத்தி தகவல் தேடினோம். அப்போது இதுதொடர்பான சில செய்தி இணைப்புகள் கிடைத்தன.

Indiatimes.com Link Archived Link 
Straitstimes.com Link Archived Link
Dailynews.lk Link Archived Link 

இந்த புகைப்படத்தில் உள்ள Huawei பெயர்ப் பலகை மற்றும் மஞ்சள் நிற திசை காட்டும் பலகை, சாலை உள்ளிட்டவற்றை நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்துடன் ஒத்துப் போகிறது. ஆனால், அதில் 2 மான்கள் இருக்க, இதில் ஒரு மான்தான் உள்ளது.

இது இலங்கை திரிகோணமலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் என்பது உறுதியாகிவிட்டாலும், நாம் ஆய்வு செய்யும் புகைப்படம் போன்ற ஒரு புகைப்படம் கிடைக்கிறதா என மீண்டும் விரிவாக தேடினோம். அப்போது, இதுபற்றி இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர் @AzzamAmeen வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவை காண நேரிட்டது.

அதில், இதுபற்றி நிறைய புகைப்படங்களை பகிர்ந்திருந்த அவர், இது திரிகோணமலையில் எடுக்கப்பட்ட ஒன்றுதான் என உறுதி செய்துள்ளார். 

Twitter Post LinkArchived Link 

எனவே, மேற்கண்ட புகைப்படம் இலங்கையில் எடுக்கப்பட்டதுதான் என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தை முன்னிட்டு பலரும் வித விதமான தலைப்புகளில் வதந்தி பரப்பி வருகின்றனர். அதில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும். நமது வாசகர்கள் இத்தகைய செய்திகளின் மீது உண்மை அறிய விரும்பினால், எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு சம்பந்தப்பட்ட செய்தியை ஃபார்வேர்ட் செய்யுங்கள்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கொரோனா வைரஸ் ஊரடங்கு; புதுக்கோட்டையில் மான்கள் சுற்றும் காட்சி உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •