அடுத்த உலக கோப்பை அணியில் தோனி: இணையதள செய்தியால் ரசிகர்கள் குழப்பம்

விளையாட்டு

‘’அடுத்த உலக கோப்பை அணியில் தோனி.. பயிற்சியாளர் அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\dhoni 2.png

Facebook Link I Archived Link

Seithi Punal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 18, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’அடுத்த உலகக் கோப்பை அணியில் தோனி.. பயிற்சியாளர் அதிரடி…,’’ என்ற தலைப்பிட்டு, அவர்களின் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

உண்மை அறிவோம்:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், தோனி ஓய்வு பெறுவாரா, இல்லையா என்பது தொடர்பாக பல்வேறு வதந்திகள் நாள்தோறும் பரவி வருகின்றன. ஆனால், இதுபற்றி தோனி இதுவரை வெளிப்படையாக எந்த பதிலும் அளிக்கவில்லை.

தற்போதைய நிலையில், அவர் அணியில் விளையாடவே விரும்புகிறார் என்றும், இதுபற்றி வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட சிலரிடம் தனது கருத்தை அவர் பகிர்ந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர, தற்போதைய நிலையில் இந்திய ஆர்மியின் பயிற்சிப் பணிகளில் தோனி ஈடுபட்டுள்ளார். இதுபற்றி அவர் பிசிசிஐ.,க்கு விளக்கம் அளித்திருக்கிறார். இதனால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டிகளில் தோனி பங்கேற்க மாட்டார். இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

C:\Users\parthiban\Desktop\dhoni 3.png

ஆனால், இந்த செய்தியை சரியாக வெளியிடாமல், அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் தோனி இடம்பெறுவார் என்று யாரோ பயிற்சியாளர் கூறியுள்ளதாகக் கூறி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியை பகிர்ந்துள்ளனர். அதில், தோனியின் இளம் வயது பயிற்சியாளர், அடுத்த டி20 உலக கோப்பை வரை தோனி விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால், இதற்கேற்ப செய்தியின் தலைப்பை சரியான முறையில் பதிவிட்டிருக்கலாம். மொட்டையாக ‘’அடுத்த உலக கோப்பை அணியில் தோனி, பயிற்சியாளர் அதிரடி, ‘’ என்று கூறியுள்ளதன் மூலமாக, வாசகர்களை குழப்பியுள்ளனர். இதனைப் பார்த்தால், தோனி அடுத்த ஐசிசி உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார் என இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கூறியிருப்பதைப் போல தோன்றுகிறது. 

C:\Users\parthiban\Desktop\dhoni 4.png

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதென்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அடுத்த உலக கோப்பை அணியில் தோனி: இணையதள செய்தியால் ரசிகர்கள் குழப்பம்

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •