இங்கிலாந்தின் உலக கோப்பை வெற்றி தொடர்பாக புதிய முடிவு வெளியானதா?

விளையாட்டு

‘’இங்கிலாந்து உலக கோப்பை வெற்றி தொடர்பான புதிய முடிவு வெளியாகியுள்ளது,’’ என்று கூறி வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\england 2.png

Facebook Link I Archived Link

Seithi Punal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த ஜூலை 15, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’இங்கிலாந்து அணியின் வெற்றி செல்லாது? வெளியானது புதிய முடிவு!,’’ என்று தலைப்பிட்டுள்ளனர். இதன் கீழே, தங்களது இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கையும் சேர்த்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. 2 முறை போட்டி டை ஆகியதால் வேறு வழியின்றி, அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு சாம்பியன் பட்டம் தரப்பட்டது.

எனினும், இங்கிலாந்து, நியூசிலாந்து இரு அணிகளுமே சம நிலையில் இருந்தாலும், இங்கிலாந்திற்கு சாம்பியம் பட்டம் கொடுத்ததற்கு கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் அதிருப்தி தெரிவிக்க தொடங்கினர்.

இந்நிலையில்தான் மேற்கண்ட செய்தியும் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் வெற்றி செல்லாது என்றும், அதுபற்றி புதிய முடிவு எதோ வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதில் கூறியுள்ளனர்.

C:\Users\parthiban\Desktop\england 3.png

அதாவது, இங்கிலாந்தின் வெற்றி பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஐசிசி பின்பற்றி வரும் இத்தகைய விதிமுறை ஆபத்தான ஒன்று எனவும், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே வெற்றிக்கு தகுதியானவை எனவும் காம்பீர் கூறியிருக்கிறார். இதனை வெளிப்படையாகச் சொல்லாமல், எதோ ஐசிசி புதிய முடிவை வெளியிட்டு இங்கிலாந்தின் உலக கோப்பை சாம்பியன்ஷிப்பை ரத்து செய்துவிட்டது போல, இவர்கள் செய்தியின் தலைப்பு உள்ளது.

இதனை படிப்பவர்கள், தவறாக அர்த்தம் புரிந்துகொள்ள நேரிடுகிறது. நாங்களும் இதனை முதல்முறை பார்க்கும்போது அப்படித்தான் நினைத்தோம். ஆனால், இங்கிலாந்தின் வெற்றி பற்றி ஐசிசி எந்த புதிய முடிவையும் அறிவிக்கவில்லை. கவுதம் காம்பீர்தான் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். அதனைச் சரியான முறையில் செய்தியாக வெளியிடாமல், வாசகர்களை ஈர்க்கும் நோக்கில் பரபரப்பிற்காக இத்தகைய தவறான தலைப்பிட்டு, குழப்பியுள்ளனர்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட செய்தின் தலைப்பு தவறு என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவின் தலைப்பு தவறாக உள்ளதென நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இங்கிலாந்தின் உலக கோப்பை வெற்றி தொடர்பாக புதிய முடிவு வெளியானதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •