FactCheck: மு.க.ஸ்டாலினுக்கு ஐநா சபை பாராட்டு எனக் கூறி பகிரப்படும் ஆதாரமற்ற செய்தி…
‘’மு.க.ஸ்டாலினுக்கு ஐநா சபை பாராட்டு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் யூடியுப் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், First Junction என்ற யூடியுப் சேனல் வெளியிட்ட வீடியோ ஒன்றின் லிங்கை ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோவில், ஆதாரங்கள் அல்லது மேற்கோள் எதுவும் காட்டாமல், போகிற போக்கில் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி ஐநா சபையில் பேச பரிந்துரைக்கலாம் என்று சிலர் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தலைப்பில் ஐநா சபை பாராட்டி விட்டதாகக் கூறியுள்ளனர். எனவே, இதனை பலரும் உண்மை என நம்பி, தவறாகப் புரிந்துகொண்டு, ஷேர் செய்து வருகின்றனர்.
குறிப்பிட்ட வீடியோ லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
இதேபோல, Post Box என்ற யூடியுப் சேனலும் இதனை வீடியோவாக வெளியிட்டுள்ளது.
இந்த யூடியுப் வீடியோவை உண்மைச் செய்தி என தவறாகப் புரிந்துகொண்டு, முரசொலி ஊடகம் கூட செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல, விடுதலை நாளிதழ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை பகிர்ந்துவிட்டு, பிறகு தவறை புரிந்துகொண்டு, செய்தியை நீக்கிவிட்டது.
விடுதலை நாளிதழ் டெலிட் செய்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Viduthalai Deleted FB Post Link
எனவே, நடக்காத ஒரு செய்தியை நடந்தது போல குறிப்பிட்டு, தவறான தலைப்பு வைத்து பகிர்ந்து, ஏராளமானோரை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
Title:மு.க.ஸ்டாலினுக்கு ஐநா சபை பாராட்டு எனக் கூறி பகிரப்படும் ஆதாரமற்ற செய்தி…
Fact Check By: Pankaj IyerResult: Misleading