ரிசர்வ் வங்கி புதிய ரூ.1000 நோட்டு அறிமுகம் செய்துள்ளதா?

சமூக வலைதளம் வர்த்தகம்

‘’ரிசர்வ் வங்கி புதியதாக அறிமுகம் செய்துள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு,’’ என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் கிளெய்ம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook ClaimArchived Link

பூபாலன் விவசாயி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 16, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், புதிய ரூ.1000 நோட்டு எனக் கூறி ஒரு கரன்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதேபோல, மேலும் பலர் பதிவிட்டுள்ளதைக் காண முடிந்தது. 

Facebook LinkArchived Link
Facebook Link Archived Link

உண்மை அறிவோம்:
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டு, மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, பல தரப்பிலும் செய்தி பரவி வந்தது. 

ஆனால், அதில் உண்மையில்லை என ஏற்கனவே ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துவிட்டது. அத்துடன், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் மிகக் குறைவான எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து நாடு முழுவதும் புழக்கத்தில் விட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

இந்நிலையில்தான், ரிசர்வ் வங்கி புதியதாக அறிமுகம் செய்துள்ள ரூ.1000 நோட்டுகள் எனக் கூறி மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இதில் இடம்பெற்றுள்ள புகைப்படம் உண்மையானது இல்லை.

அந்த ரூபாய் நோட்டிலேயே Artistic Imagination (கற்பனை படம்) என்றும், அதன் கீழே MK Gandhi என கையெழுத்திடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. மேலும், ரூபாய் நோட்டுக்கு சீரியல் எண் உள்ள இடத்தில் 0000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக யாரோ கற்பனையாக தயாரித்து வெளியிட்ட புகைப்படத்தை உண்மையான புது ரூ.1000 நோட்டு எனக் கூறி பலரும் பகிர்ந்து வருவதாக, தெளிவாகிறது. 

இதுதவிர மேற்கண்ட போலி ரூபாய் நோட்டு பற்றி பல ஊடகங்களும் உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை சமர்ப்பித்துள்ளன. 

Hindustan Times Link The Quint Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ‘’ரிசர்வ வங்கி புதிய ரூ.1000 நோட்டு எதுவும் வெளியிடவில்லை; தற்சமயம் அதுபோன்ற திட்டமும் இல்லை என ரிசர்வ் வங்கியே விளக்கமும் அளித்துவிட்டது,’’. எனவே மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல்கள் தவறு என உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ரிசர்வ் வங்கி புதிய ரூ.1000 நோட்டு அறிமுகம் செய்துள்ளதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False