சத்தியமங்கலம் பண்ணாரி சாலையின் புகைப்படம் இதுவா?

சமூக வலைதளம் தமிழகம்

‘’சத்தியமங்கலம் பண்ணாரி சாலையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆராய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook LinkArchived Link 

சமுத்திரக்கனி எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 19, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், நெடுஞ்சாலை ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, இயற்கை எழில் சூழ்ந்த சாலை. சத்தியமங்கலம் பண்ணாரி சாலை, என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

Facebook LinkArchived Link 

உண்மை அறிவோம்:
சந்தேகத்தின் பேரில் மேற்கண்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது சத்தியமங்கலம் பண்ணாரி சாலை இல்லை, இது ஆஸ்திரேலியாவில் உள்ள Kangaroo Island என்ற விவரம் கிடைத்தது.

இதன்படி ஆஸ்திரேலியாவின் தெற்கே உள்ள கங்காரு தீவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மேற்கண்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் நிறைய காண கிடைக்கின்றன.

இதுதவிர, உண்மையிலேயே சத்தியமங்கலம் சாலை எப்படி உள்ளதென்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலை சற்று கங்காரு தீவு சாலையைப் போலவே ஒத்திருப்பதை காண நேரிட்டது. 

இதன் அடிப்படையில், உண்மையான சத்தியமங்கலம் சாலைக்கும், ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காரு தீவு சாலைக்கும் வித்தியாசம் தெரியாமல், குழப்பத்தின் பேரில் மேற்கண்ட தவறான புகைப்பட செய்தியை ஃபேஸ்புக் பதிவர்கள் பகிர்ந்திருக்கலாம் என தெளிவாகிறது.

சத்தியமங்கலம் வனப்பகுதி தொடர்பான வீடியோ ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.

மேலும், நிஜமான கோவை – சத்தியமங்கலம் சாலை புகைப்படத்தையும், நமது ஃபேஸ்புக் பதிவர் வெளியிட்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து கீழே அளித்துள்ளோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் புகைப்பட செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சத்தியமங்கலம் பண்ணாரி சாலையின் புகைப்படம் இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “சத்தியமங்கலம் பண்ணாரி சாலையின் புகைப்படம் இதுவா?

  1. எனது பிரபல தமிழ் பத்திரிகையில் செய்தி முதலில் கொடுப்பவர் முழு பொறுப்பு ஏற்பது போல் உங்களது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் முதல் நபரை ஏன் நீங்கள் ஆதாரமாக ஏன் எடுக்க கூடாது? பல மாதங்களுக்கு பின் கிராஸ் செக் செய்து என்ன பிரயோஜனமும் இல்லை நண்பரே? உங்களது தவறான நடவடிக்கைகளால் எக்ஸ்குளிசிவ் செய்திகளை நான் பதிவேற்றம் செய்வதில்லை என்ற முடிவில் இருக்கிறேன், அதனால் பேஸ்புக்கு நஷ்டம், எனக்கு நேரம் மிச்சம்

Comments are closed.