திமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி!

அரசியல் தமிழ்நாடு

‘’திமுகவினரை மதிக்காத உதய நிதி ஸ்டாலின் மகன்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim Link 1Archived Link

இதில், திமுக அலுவலகம் போல இருக்கும் ஒரு அறையில், சிறுவன் நாற்காலியில் அமர்ந்திருக்க, வயதான நபர்கள் சிலர் நின்றிருப்பதைப் போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளனர். ‘’இதுதான் உதயநிதி ஸ்டாலின் மகன் கட்சியினருடன் ஆலோசனை நடத்தும் காட்சி,’’ என்று கூறி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த புகைப்படத்தில் இருப்பது உண்மையிலேயே, உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். உதயநிதி ஸ்டாலின் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஆதாரத்திற்காக, கீழே இணைத்துள்ளோம்.

எனவே, எடுத்த எடுப்பிலேயே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளதைப் போல, புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் உதயநிதி மகன் இன்பநிதி இல்லை என்பது தெளிவாகிறது.

இருந்தாலும், இதில் இருப்பவர்கள் யார் என்று விரிவாக, ஃபேஸ்புக் முழுக்க விதவிதமான கீவேர்ட் பயன்படுத்தி விவரம் தேடினோம். சில நாட்கள் தேடிய பின் இதுதொடர்பான ஆதாரம் கிடைத்தது. அதாவது, இதில் நின்றபடி இருப்பவர், செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் ஆவார். அவரிடம், உள்ளூர் சிறுவன் ஒருவன் கொரோனா நிவாரண நிதியாக, தனது சேமிப்புப் பணத்தை கொடுத்துள்ளான். இதனை பாராட்டி, தனது இருக்கையில் சிறிது நேரம் அந்த சிறுவனை அமரவைத்து, மஸ்தான் கவுரவப்படுத்தியுள்ளார். 

இதுபற்றி திமுக ஆதரவாளர்களே விரிவான பதிவை வெளியிட்டுள்ளனர்.

Facebook Post LinkArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் மகன் என்று கூறி பகிரப்பட்ட புகைப்படம் தவறானது என்று தெளிவாகிறது.

முடிவு:
நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:திமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False