ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவி ஆயிஷ் கோஷ் கைக்கட்டு சர்ச்சை- உண்மை அறிவோம்!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் ஒரே நாளில் இடது மற்றும் வலது கையில் மாற்றி மாற்றிக் கட்டுப் போட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Aishe 2.png
Facebook LinkArchived Link

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் வலது கையில் கட்டுப் போட்டு பேசுவது போன்று ஒரு படம், இடது கையில் கட்டுப்போட்டு நிற்பது போன்ற படத்தை ஒன்று சேர்த்து கொலாஜ் செய்து படம் வெளியிட்டுள்ளனர்.

நிலைத் தகவலில், “JNU வில் தாக்கபட்டதாக பொய்யான செய்தியைப் பரப்பிய ஊடகங்கள் வரிசையாக வரவும். ஒரே நாளில் இடது கை வலது கை யாக மாறியது!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Krp Palanisamy என்பவர் ஜனவரி 10, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தை பிளிப் எடுத்துப் போட்டது போல உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் கையில் கட்டுப் போட்டதை வைத்து வதந்தி பரப்பினர். தற்போது அதே டிரிக்ஸை பயன்படுத்தி வலதுசாரி ஆதரவாளர்கள் வதந்தி பரப்பி வருவது தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.

Aishe 3.png
Search Link

ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் பேச்சு என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற வீடியோ எக்கனாமிக்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட இணைய ஊடகங்களில் வெளியாகி இருப்பது தெரிந்தது. அந்த வீடியோவை எடுத்துப் பார்த்தோம். ஜனவரி 6ம் தேதி இந்த வீடியோவை எக்கனாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டு இருந்தது. அது டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வெளியான வீடியோ. முழுமையான வீடியோவாக இல்லாமல் கொலாஜ் வடிவில் வேறு சில வீடியோக்களை தொகுத்து ஒரே வீடியோவாக வெளியிட்டிருந்தனர்.

அதே நேரத்தில், theprint.in என்ற ஊடகம் அந்த பேட்டி படத்தை வைத்திருந்தனர். அதில் ஆயிஷி இடது கையில்தான் கட்டு இருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போல வலது கையில் இல்லை. 

Aishe 4.png
economictimes.indiatimes.comArchived Link 1
theprint.inArchived Link 2

எனவே, குறிப்பிட்ட அந்த தேதியில் வெளியான வீடியோ உள்ளதா என்று தேடினோம். அப்போது, இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், ஆயிஷ் கோஷ் இடது கையில் கட்டுப்போடப்பட்டு இருந்தது. மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் வலது புறம் இருந்த நபர் மற்றும் இடது புறம் இருந்த பெண் எல்லாம் மாறி அமர்ந்திருந்தனர். 

Aishe 5.png

இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட வீடியோவிலும் பேட்டி அளிப்பவர்கள் பின்புறம் FEE HIKE என்று எழுதப்பட்டு இருந்தது. இதன் மூலம் இதுதான் சரியான படம் என்பது தெரிந்தது. இந்த காட்சியை எடுத்து ஃபிளிப் செய்து வலது கையில் கட்டு இருப்பது போன்று தவறாக படத்தை வெளியிட்டிருப்பது தெரிந்தது. 

Archived Link

நம்முடைய மலையாளம் ஃபேக்ட் கிரஸண்டோ கூட இது தொடர்பாக கடந்த ஜனவரி 11ம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில் அவர்கள் AISF All India Student’s Federation வெளியிட்டிருந்த வீடியோவை ஆதாரமாக வைத்திருந்தனர்.

malayalam.factcrescendo.com

மொபைல் போனில் செல்ஃபி எடுக்கும்போது அது பெரும்பாலும் ஃபிளிப்பாகத்தான் பதிவாகும். அதை நாம் சரி செய்துகொள்ள முடியும். ஆனால், நேரான படத்தை இவர்கள் ஃபிளிப் செய்து கையில் மாற்றி மாற்றி கட்டுப்பட்டுள்ளார். உண்மையில் அவருக்கு அடிபடவில்லை என்று விஷமத்தனமாக பதிவிட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்லைக் கழகத்தில் தாக்கப்பட்ட ஆயிஷ் கோஷ் என்ற பொய் செய்தி பரப்புகிறார்கள்” என்று கூறி பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவி ஆயிஷ் கோஷ் கைக்கட்டு சர்ச்சை- உண்மை அறிவோம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False