
ஸ்டாலினின் அப்பா அன்பழகன்தான் என்று தயாளுஅம்மாள் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
தயாளுஅம்மாள் படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “அன்பழகன்தான் ஸ்டாலினின் தந்தை. – தயாளு அம்மாள் பகீர் தகவல்” என்று டைப் செய்யப்பட்டுள்ளது.
நிலைத்தகவலில், “நாங்க சொன்னா காவி வெறியன்னு சொல்றீங்க. இப்போ என்ன சொல்ல போறீங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Prabhu Vanniyappan என்பவர் 2019 நவம்பர் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அரசியல் எதிரிகளைப் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சிப்பது வாடிக்கை. ஆனால், தரம் தாழ்ந்த பதிவுகள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் பற்றி எல்லாம் ஆபாசமான, அவதூறான பதிவுகளை எதிர்த்தரப்பானர் வெளியிட்டு வருகின்றனர். கனிமொழியின் தந்தை நடிகர் செந்தாமரை என்றும், அன்பழகன் தன்னுடைய இரண்டு மனைவிகளுடன் உள்ள படம் என்று விதவிதமான வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றைப் பற்றி அவ்வப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம்.
கனிமொழியின் உண்மையான தந்தை நடிகர் செந்தாமரை: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு |
க.அன்பழகன் 2 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம்; உண்மை அறிவோம்! |
இந்த நிலையில், ஸ்டாலினின் தந்தை அன்பழகன் என்று தயாளுஅம்மாவே கூறியதாக ஒரு தரம் தாழ்ந்த பதிவு சமூக ஊட்டங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. உண்மையில் தயாளு இவ்வாறு கூறினாரா, இந்த நியூஸ் கார்டு உண்மையானதுதானா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தயாளுஅம்மாள் அல்சைமர் என்ற மறதி நோயால் அவதிப்பட்டு வருகிறார். மேலும், வயது முதுமை காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் எப்போது பேட்டி அளித்தார் என்று எந்த ஒரு விவரமும் இந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடவில்லை.
tamil.oneindia.com | Archived Link 1 |
News7 Tamil | Archived Link 2 |
பொதுவாக நியூஸ்7 தமிழ் வெளியிடும் நியூஸ்கார்டுகளில் தேதி, நேரம் கட்டாயம் இருக்கும். இந்த நியூஸ் கார்டில் அது இல்லை. சௌகரியமாக அகற்றப்பட்டிருப்பது தெரிந்தது.
இந்த டிசைன் நியூஸ் கார்டை நியூஸ்7 தமிழ் 2017ம் ஆண்டு வாக்கில் பயன்படுத்தியது. அப்போது உள்ள நியூஸ்கார்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது போலியானது என்று தெரிந்தது.இரண்டு நியூஸ் கார்டுகளிலும் பயன்படுத்தப்பட்டிருந்த தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது.

இருப்பினும், இந்த நியூஸ் கார்டு குறித்து நியூஸ்7 தமிழைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது இது போலியானது என்று உறுதி செய்தனர்.
நம்முடைய ஆய்வில்,
தயாளுஅம்மாள் உடல்நலக் குறைவு, ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டு போலியானது என்பது ஒப்பீடு அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தயாளுஅம்மாள் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஸ்டாலினின் அப்பா அன்பழகன்; அநாகரீகமான ஃபேஸ்புக் பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False
