கனிமொழியின் உண்மையான தந்தை நடிகர் செந்தாமரை: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’நடிகர் செந்தாமரை கனிமொழியின் முதல் தந்தை,’’ எனக் கூறி ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\kanimozhi 2.png

Archived Link

விளையாட்டு பையன் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது பார்க்கும்போதே மிகத் தவறான தகவல் என தெரிகிறது. இருந்தாலும், இதனை பலரும் உண்மை என நினைத்து ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கனிமொழியின் தந்தை திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி ஆவார். அவரது தாய் ராஜாத்தி அம்மாள் என்பது தமிழகத்திற்கே தெரிந்த விசயம்தான். நாடக நடிகையாக இருந்த ராஜாத்தியை கருணாநிதி திருமணம் செய்துகொண்டார். இதுவெல்லாம் தமிழக அரசியலில் கடந்த கால கதை.

C:\Users\parthiban\Desktop\kanimozhi 3.png

இந்நிலையில், நடிகர் செந்தாமரையை இதில் தொடர்புபடுத்தி, ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, குறிப்பிட்ட புகைப்படத்தை #Yandex இணையதளத்தில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். ஆனால், எந்த விவரமும் கிடைக்கவில்லை. பின்னர், நடிகர் செந்தாமரையின் குடும்பம் பற்றி விவரம் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் பற்றிய தகவல் கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\kanimozhi 4.png

அதாவது, நடிகர் செந்தாமரை காலமான நிலையில், அவரது மனைவி கவுசல்யா தொடர்ந்து, டிவி சீரியல், சினிமா படங்களில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த ஊடக பேட்டியில், மேற்கண்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி, தனது குடும்பம் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதை வைத்தே மேற்கண்ட ஃபேஸ்புக் வதந்தியை பரப்பியுள்ளனர் என்றும் தெளிவாகிறது.

கவுசல்யா சமீபத்தில் விகடன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\kanimozhi 5.png

மேலே இருப்பதுதான் உண்மையான புகைப்படம். இந்த புகைப்படம் பற்றிய விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, செந்தாமரை மனைவியின் பெயர் கவுசல்யா என்றும், அவர்களின் குடும்ப புகைப்படத்தை தேவையின்றி, கருணாநிதி, கனிமொழி, ராஜாத்தியுடன் தொடர்புபடுத்தி தவறான முறையில் இத்தகவலை பகிர்ந்துள்ளனர் என்றும் உறுதியாகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவி விஷமத்தனமானது, அதேசமயம் மிகவும் தவறானது. தனிப்பட்ட நபர்களை பாதிக்கக்கூடியது என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கனிமொழியின் உண்மையான தந்தை நடிகர் செந்தாமரை: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Parthiban S 

Result: False