நீ என்ன பத்தினியா என்று கஸ்தூரியை பார்த்து லதா கேட்டாரா?

சமூக வலைதளம்

‘’நீ என்ன பத்தினியா?- பிரபு, சத்யராஜ் உன்ன தடவியது மறந்துபோச்சா கஸ்தூரி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1 Cine Café LinkArchived Link 2

Day one cooking tips தினம் ஒரு சமையல்

எனும் ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், Cine Café என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியின் தலைப்பில், ‘’நீ என்ன பத்தினியா?- பிரபு சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா கஸ்தூரி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

செய்தியின் உள்ளே சமீபத்தில் நடிகை கஸ்தூரி மற்றும் லதாவிற்கு நிகழ்ந்த ட்வீட் பிரச்னை ஒன்றை பற்றி எழுதியுள்ளனர். அதில், நடிகை லதா, கஸ்தூரிக்கு சில கண்டனங்களை தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியின் தலைப்பில், கஸ்தூரியை பத்தினியா என்று லதா கேட்பது போல எழுதிவிட்டு, செய்தியின் உள்ளே, கஸ்தூரி பற்றி ட்வீட்டரில் பலரும் இவ்வாறு கமெண்ட் போடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

எடுத்த எடுப்பிலேயே, செய்தியின் பரபரப்பிற்காக தவறான அதே சமயம் வக்கிரமான தலைப்பை எழுதி வெளியிட்டுள்ளனர் என தெளிவாக தெரியவருகிறது. அத்துடன், செப்டம்பர் 7, 2019 தேதியிட்டு இந்த செய்தியை எழுதியுள்ளனர். 

உண்மையில் இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 10, 11 தேதிகளில் நிகழ்ந்ததாகும். அப்போது ஐபிஎல் சீசன் போட்டிகள் நடைபெற்றன. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய போட்டியில் மிக மெதுவாக, வீரர்கள் ரன் சேர்த்தனர். இதனை விமர்சித்த கஸ்தூரி, பல்லாண்டு வாழ்க படத்தில் லதாவை எம்ஜிஆர் தடவியதைவிட மிக மெதுவாக சிஎஸ்கே வீரர்கள் தடவுகிறார்கள், என ட்வீட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்த பதிவுக்கு எம்ஜிஆர், லதா ரசிகர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கடும் அதிருப்தி தெரிவித்தனர். அதில் ஒன்றுதான், பிரபு, சத்யராஜ் உன்ன தடவியதெல்லாம் மறந்துபோச்சா கஸ்தூரி என்ற வசனமும். இதனை ட்விட்டர் பதிவர் ஒருவர்தான் கமெண்ட்டாக வெளியிட்டிருந்தார். உண்மையில் லதா இப்படி பேசவே இல்லை.

இந்த சம்பவம் பற்றி பின்னர் கஸ்தூரி, லதாவை போனில் தொடர்புகொண்டு பேசி மன்னிப்பு கேட்க, அதையேற்று லதா மன்னித்தும் விட்டார்.

Archived Link

இதுதொடர்பாக, ஊடகங்களுக்கு பேட்டி அளித்த லதா, நாகரீகமாகவே கஸ்தூரி பற்றி பேசியுள்ளார். மேற்கண்ட செய்தியின் தலைப்பில் கூறியதைப் போல பேசவில்லை.

அவரது பேட்டி, கடந்த ஏப்ரல் மாதத்தில் விகடன் இணையதளம், நக்கீரன், தினமலர் உள்பட பல முன்னணி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.

Nakkheeran LinkTimesnowtamil LinkVikatan.com LinkDinamalar Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மேற்கண்ட செய்தி பழைய செய்தியாகும். இது ஏப்ரல் மாதம் நிகழ்ந்த சம்பவம். தற்போது Cine Café இணையதளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
2) இந்த செய்தியின் தலைப்பு தவறு.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:நீ என்ன பத்தினியா என்று கஸ்தூரியை பார்த்து லதா கேட்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture