Fact Check: மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை கடலில் வீசினார்களா?

Coronavirus உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை விமானத்தில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வீசும் காட்சி,’’ என்ற பெயரில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link
TN News FB LinkArchived Link

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், போர் விமானம் போன்ற ஒன்றில் இருந்து வரிசையாக ஆட்கள் கீழிறக்கப்படுவதைக் காண முடிகிறது. இதன் மேலே, ‘’கொரோனா தாக்கி இறந்தவர்களை நடுக்கடலில் வீசும் மெக்சிகோ அரசு,’’ என்று எழுதியுள்ளனர்.

எனவே, இது உண்மையாக இருக்கும் என்று நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து முதலில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது மெக்சிகோவில் நிகழவில்லை என்ற விவரம் தெரியவந்தது. 

இந்த வீடியோ கடந்த 2018ம் ஆண்டு முதலாக பரவி வருகிறது. இதில், விமான சாகசம் செய்யும் குழுவினர் ஒரு விமானத்தில் இருந்து குதிப்பதை தெளிவாகக் காண முடிகிறது. நமக்கு கிடைத்த லிங்கில் இது Mi 26 ரக விமானத்தில் இருந்து நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய ஸ்கைடைவிங் என்று கூறப்பட்டிருந்தது. அதனை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.

இந்த விமானத்தில் காணப்படும் நட்சத்திரத்தை வைத்துப் பார்த்தால், இது ரஷ்யாவைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் ரஷ்யாவில் பயன்படுத்தப்படும் Mi 26 ரக விமானம் எப்படியிருக்கும் என தேடினோம்.

அப்போது, நாம் தேடும் வீடியோவில் உள்ள ஸ்டார் குறியீடு அதனுடன் சரியாகப் பொருந்தியது. 

எனவே, இது ரஷ்யாவைச் சேர்ந்த விமான சாகசக் குழுவினரால்தான் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதை வைத்து, வெவ்வேறு கீ வேர்ட் பயன்படுத்தி தகவல் தேடினோம். அப்போது, நாம் ஆய்வு செய்யும் வீடியோவின் தொடர்ச்சியாக ஒரு வீடியோ கிடைத்தது.

இந்த வீடியோவில் குறிப்பிட்ட நட்சத்திரம் பொறிக்கப்பட்ட அதே விமானம் வானில் பறந்து சென்று, பின்னர் ஏராளமான ஸ்கைடைவிங் ஆர்வலர்கள் பாராசூட் மூலமாகக் கீழே குதிப்பது போன்ற காட்சிகளை காண முடிகிறது. 

இதுபற்றி ஏற்கனவே கடந்த ஜூன் 12, 2020 அன்று நம்மைப் போன்ற ஃபேக்ட்செக்கர்கள் சிலர் ஆய்வு செய்து உண்மையை வெளியிட்டுள்ளனர். 

Poligrafo.sapo.pt LinkArchived Link

எனவே, 2018ம் ஆண்டில் பதிவேற்றம் செய்யப்பட்ட ரஷ்ய விமான சாகசக் குழு ஒன்றின் வீடியோவை எடுத்து, தற்போதைய கொரோனா நிகழ்வுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்ற தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:Fact Check: மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை கடலில் வீசினார்களா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False