ஆட்டிறைச்சி மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறதா?- விஷமத்தனமான வதந்தி!

Coronavirus சமூக ஊடகம்

‘’ஆட்டிறைச்சி மூலமாக பரவும் கொரோனா வைரஸ்,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இது உண்மையான செய்திதானா என்ற சந்தேகத்தை ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2

மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளதாகக் கூறி மேற்கண்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதால், பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்டது போன்ற நியூஸ் கார்டை சமீபத்தில் News 7 Tamil ஊடகம் வெளியிடவில்லை. இந்த டெம்ப்ளேட்டை அவர்கள் கைவிட்டு, 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது என்று, அதன் ஆன்லைன் பிரிவு நிர்வாகி நம்மிடம் ஏற்கனவே பல முறை கூறியிருக்கிறார். இந்த குறிப்பிட்ட டெம்ப்ளேட்டை மையமாக வைத்தே ஏராளமான போலி செய்திகளை News 7 தமிழ் ஊடகத்தின் பெயரில் பலர் தயாரித்து பரப்பி வருகின்றனர். அதுபோலவே, மேற்கண்ட செய்தியும் போலியாக தயாரிக்கப்பட்டதுதான். தேதி, நேரம் என எந்த விவரமும் இல்லாமல் இப்படி மொட்டையாக எந்த பிரேக்கிங் நியூஸ் கார்டையும் News 7 Tamil வெளியிடுவதில்லை. 

இதுதவிர, ஆட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று, மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளதா என விவரம் தேடினால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கிய நாள் முதலாக, சிக்கன், ஆட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகள் வழியே கொரோனா பரவும் என்று வதந்தி பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், இப்படியான வதந்திகளுக்கு ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளித்திருக்கின்றன. இதுதொடர்பான சில செய்தி இணைப்புகளை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

TheHindu LinkArchived Link
Bloombergquint LinkArchived Link
Downtoearth LinkArchived Link

இதேபோல, Food Safety and Standards Authority of India ஆடு, கோழி இறைச்சிகளை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கிறது. 

எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வரும் என்று கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

2) இதுதொடர்பாக ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும் உரிய விளக்கம் அளித்துள்ளன.

3) அசைவ உணவுகளால் கொரோனா வைரஸ் பரவாது; வேண்டுமென்றே அவற்றின் விற்பனையை பாதிக்கச் செய்யும் வகையில் சிலர் உள்நோக்கத்துடன் மத்திய அரசு பெயரில் மேற்கண்ட வதந்தியை பரப்பியுள்ளனர். இதுபோல செய்தி எதுவும் நியூஸ்7 தமிழ் ஊடகம் வெளியிடவில்லை.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஆட்டிறைச்சி மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறதா?- விஷமத்தனமான வதந்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False