கீழே தோண்டியதால் அது கீழடி என்று ராஜேந்திர பாலாஜி சொன்னாரா?

அரசியல் சமூக ஊடகம்

‘’கீழே தோண்டியதால் அது கீழடி,’’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னதாக, ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ராஜேந்திர பாலாஜி கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி ‘’கீழே தோண்டினால் அது கீழடி, மேலே தோண்டியிருந்தால் அது மேலடி,’’ என விமர்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையாகப் பேசுவது வாடிக்கையான ஒன்றுதான். அவர் பேசிய பல்வேறு சர்ச்சைக்குரிய விசயங்கள் பற்றிய வீடியோ செய்தியை இங்கே கிளிக் செய்து பார்க்கவும். 

சமீபத்தில் கூட, தமிழர்கள் உண்மையான இந்தியர்கள் இல்லை என்று அவர் பேசியதாக ஒரு போலி செய்தி பகிரப்பட்டிருந்தது. அதுபற்றி ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, அதன் முடிவுகளை நாம் வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுபோலவே, தற்போதைய ஃபேஸ்புக் வதந்தியும் பகிரப்பட்டுள்ளது. இது தவறான தகவலாகும். ராஜேந்திர பாலாஜி எந்த இடத்திலும் இவ்வாறு பேசியதாக செய்திகள் வெளியாகவில்லை. அவர் சார்ந்த அதிமுக அரசுதான் தற்போது கீழடி ஆராய்ச்சிக்கு, பக்க பலமாக இருந்து, செயல்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், ராஜேந்திர பாலாஜி இப்படி எதிர்மறையாக பேசியிருக்க வாய்ப்பில்லை. இந்த நியூஸ்கார்டு உண்மையா என Fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அப்போது, இது போலியாகச் சித்தரிக்கப்பட்ட நியூஸ்கார்டு என உறுதியானது.

இதன்படி, ராஜேந்திர பாலாஜி பற்றி வெளியிட்ட செய்தியை அழித்து, போலியாகச் சித்தரித்து வெளியிட்டிருக்கிறார்கள் என, தெரியவருகிறது.

இதேபோல, அவர் கீழடி பற்றி வேறு எதுவும் பேசியிருக்கிறாரா என சந்தேகத்தின் பேரில் அவரது அலுவலகத்தை தொடர்புகொண்டோம். ‘’அரசியல் எதிர்க்கருத்து உள்ளவர்கள் இப்படி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்பாக தவறான கருத்துகளை சித்தரித்து வெளியிடுவது வழக்கமாக உள்ளது,’’ என மறுத்துவிட்டனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கீழே தோண்டியதால் அது கீழடி என்று ராஜேந்திர பாலாஜி சொன்னாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •