பெண் பாதுகாப்பில் முதல் இடம் பிடித்த திருநெல்வேலி: உண்மை அறிவோம்!

சமூக ஊடகம் | Social தமிழகம்

‘’பெண் பாதுகாப்பில் திருநெல்வேலி நகரம் முதலிடம் பிடித்துள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link 

செப்டம்பர் 24, 2019 அன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், நியூஸ் 7 பெயரில், நியூஸ் கார்டு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’ஆசியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியான 20 நகரங்களின் பட்டியலில் ஒன்றுமே இடம்பெறாத நிலையில் முதல் இடத்தைப் பிடித்தது திருநெல்வேலி மாநகரம்,’’ எனக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர தொடங்கியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
முதலிலேயே ஒரு விசயம் நமது வாசகர்களுக்காக தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இது போலியாக சித்தரிக்கப்பட்ட நியூஸ் கார்டாகும். அதில் ‘’20 நகரங்களின் பட்டியலில் ஒன்றுமே இடம்பெறாத நிலையில் முதல் இடத்தைப் பிடித்தது திருநெல்வேலி மாநகரம்,’’ எனக் கூறியுள்ளனர். இதைப் படித்தாலே தெரியும், இப்படி வார்த்தை ஜாலத்தில் ஒரு நியூஸ் கார்டு உண்மையாலுமே பகிரப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒன்றுமே இடம்பெறாத நிலையில் முதல் இடத்தைப் பிடித்த திருநெல்வேலி எனக் கூறியுள்ளதன் மூலமாக, இது போலியான செய்தி என தெளிவாகிறது.

இருந்தாலும், சந்தேகத்தின் பேரில் fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அதில் போலியாகச் சித்தரிக்கப்பட்ட நியூஸ் கார்டு என சந்தேகமின்றி தெரியவந்தது.

இப்படி எங்கேயும் செய்தி வெளியாகவில்லை. அதேசமயம், பெண்கள் பாதுகாப்பாக வாழும் நாடுகள், நகரங்கள் பட்டியலை பலரும் வெளியிட்டு வருகின்றனர். இதன்படி, 2018ம் ஆண்டில் women peace and security index இதுதொடர்பான பட்டியல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, மேலும் சில உதாரண செய்திகளை வாசகர்கள் தெளிவுபெறுவதற்காக, கீழே இணைத்துள்ளோம்.

Thrillophilia.com Link Valuechampion.sg link

தற்போதைய நிலையில், ceoworld.biz என்ற இணையதளம் 2019ம் ஆண்டுக்கான பெண்கள் பாதுகாப்பு நகரங்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள நகரங்களில், அபுதாபி முதலிடத்திலும், தோஹா நகரம் 2வது இடத்திலும் உள்ளதாக, கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, ஐநா சபை பெண்கள் பாதுகாப்பு பற்றி வெளியிட்ட ஆய்வறிக்கையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், இந்திய அளவில் பெண்கள் பாதுகாப்பில் சூரத், ஜெய்ப்பூர், சென்னை, முஸோரி உள்ளிட்ட நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சர்வதேச நகரங்கள் பல, பெண்கள் பாதுகாப்பில் முன்னிலை வகிப்பது தெரியவருகிறது. ஒருவேளை பெண் பாதுகாப்பு நிறைந்த 20 நகரங்கள் பட்டியல் வெளியானால் அதை வெளியிட்டவர்கள் யார் என்ற விவரத்தையும் குறிப்பிட வேண்டும். அப்படி எதுவும் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் இல்லை. மொட்டையாக, போகிற போக்கில் திருநெல்வேலி பெயரில் ஒரு போலியான செய்தியை உருவாக்கி வெளியிட்டதன் மூலமாக, மக்களை குழப்பியுள்ளனர் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பெண் பாதுகாப்பில் முதல் இடம் பிடித்த திருநெல்வேலி: உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False