ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஐபிஎஸ் அதிகாரி ஆனதாக பகிரப்படும் வதந்தி

சமூக ஊடகம்

‘’ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஐபிஎஸ் அதிகாரி ஆன வியப்பான சம்பவம்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்பட தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

செப்டம்பர் 7, 2020 அன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், பெண் ஒருவரும், 2 ஆண்களும் போலீஸ் சீருடை அணிந்தபடி ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் 2 அண்ணன், 1 தங்கை, IPS அதிகாரிகளாக…. சல்யூட் அடித்து பாராட்டுகிறோம்,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த புகைப்படம் பற்றி கூறியுள்ள தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில், இதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, pooja.vashisth.25 என்ற இன்ஸ்டாகிராம் ஐடி இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்த விவரம் கிடைத்தது.

Sardar Vallabh Bhai Patel National Police Academy பெயரை குறிப்பிட்டு, பூஜா இந்த புகைப்படத்தை, அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனுடன், Shrutsom, Tusharg_IPS உள்ளிட்டோரையும் டேக் செய்துள்ளார். 

Instagram LinkArchived Link

இதன்பேரில், மேற்கண்ட ஐபிஎஸ் அதிகாரிகளில் Tushar Gupta என்பவரை நமது ஆங்கில பிரிவினர் தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், ‘’நாங்கள் 3 பேரும் ஒன்றாக ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள். சகோதர, சகோதரிகள் அல்ல,’’ என்றார். 

இதே தகவலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். 

Tushar Gupta Instagram Link

இதுபற்றி நமது ஆங்கில பிரிவினர் ஏற்கனவே வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

FactCrescendo English Article Link

எனவே, ஐபிஎஸ் பயிற்சியின்போது நட்பு முறையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து, சகோதர, சகோதரிகள் என்று கூறி தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட புகைப்படம் பற்றிய தகவல் தவறு என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஐபிஎஸ் அதிகாரி ஆனதாக பகிரப்படும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •