
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
இந்த ஃபேஸ்புக் பதிவில் நியூஸ் 7 பெயரில் ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆதரவு தேவை இல்லை என்று ராஜேந்திர பாலாஜி சொன்னதாக, எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி முதலில் நியூஸ்7 டிவி சேனல் வெளியிட்டதா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். அப்போது இது உண்மையில் நியூஸ் 7 வெளியிட்டது இல்லை, அதில் உள்ள தகவல் எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்தது.

News7 Tamil Twitter Link | Archived Link |
அதேசமயம், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு எங்கேனும் பேசினாரா என்ற விவரம் தேடினோம். அப்போது கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் இதுதொடர்பான சர்ச்சை ஒன்றில் அவர் சிக்கிய விவரம் கிடைத்தது.
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராஜேந்திர பாலாஜியை சந்திக்க சில முஸ்லீம் இளைஞர்கள் சென்றதாகவும், அவர்களிடம், ‘’இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்களே?,’’ என்று ராஜேந்திர பாலாஜி கேலி பேசியதாகவும் செய்தி பரவியது.
Vikatan news link | Archived Link |
ஆனால், இந்த தகவலை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அப்போதே மறுத்துவிட்டார்.
Dinakaran News Link | Archived Link |
இதுதொடர்பாக, நாமும் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, முடிவை சமர்ப்பித்துள்ளோம். அதனை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்களை விமர்சித்ததாக 2019ம் ஆண்டில் தகவல் வெளியானது. ஆனால், அதனை அப்போதே ராஜேந்திர பாலாஜி மறுத்துவிட்டார். அதுபற்றி நாமும் செய்தி வெளியிட்டிருக்கிறோம். அதேசமயம், அவர் தலித்களை விமர்சித்து பேசியதாக எந்த செய்தியும் இல்லை.
2) ராஜேந்திர பாலாஜி பற்றி நியூஸ்7 வெளியிட்டதாகக் கூறப்படும் நியூஸ் கார்டு போலியானது. உண்மையான நியூஸ் கார்டு நமக்கு கிடைத்துள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை நமது வாசகர்கள் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சிறுபான்மையினர், தலித் ஓட்டுகள் வேண்டாம் என்று ராஜேந்திர பாலாஜி பேசினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False

ஏப்பா அய்யேரே ..நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்கு.அதைெல்லாம் விட்டுட்டு இப்படி தேவையில்லாத ஆராய்ச்சி பண்ணாதே. நாட்டை சீரழிச்சிராதீங்க’BJP’RSS செய்யக்கூடிய அக்கிரமங்களையும், அநியாயங்களையும், களவானித்தனத்ையும், ஆராய்ந்து பதிவிடுங்கள்.