2019-ல் இந்திய தேசிய கீதம் வாசித்த அமெரிக்க ராணுவம்; விதவிதமாக பரவும் வதந்தி!

இந்தியா சமூக ஊடகம் சர்வதேசம்

இந்திய தேசிய கீதத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் இசைத்ததை வைத்து சமூக ஊடகங்களில் விதவிதமான வதந்திகள் பரவி வருகின்றன.

தகவலின் விவரம்:

Facebook Link 1Archived Link 1
Facebook Link 2Archived Link 2

அமெரிக்க ராணுவம் முதன்முறையாக இந்திய தேசிய கீதத்தை வாசிக்கிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதே வீடியோ கடந்த ஆண்டு, அமெரிக்காவுக்கு மோடி வருவதையொட்டி அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்து பயிற்சியில் ஈடுபட்டனர் என்று பகிரப்பட்டு வந்தது. 

இந்த வீடியோக்களை A.P. Raman என்பவர் 2020 ஆகஸ்ட் 16ம் தேதியும், I Support H.Raja என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 செப்டம்பர் 19ம் தேதியும் வெளியிட்டிருந்தது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

இந்தியாவின் 74வது சுதந்திர தினம் 2020 ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் முதன் முறையாக இந்திய தேசிய கீதத்தை இசைத்தது என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. எப்போது என்று குறிப்பிடவில்லை என்றாலும், சுதந்திர தினத்துக்கு அடுத்த நாள் இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருந்ததால் பலரும் தற்போது நடந்தது போல நினைத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று தேடிய போது, கடந்த ஆண்டு மோடி வருகைக்காக என்று இதே வீடியோவை பலரும் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. எனவே, எது உண்மை என்று தெளிவுபடுத்தும் வகையில் ஆய்வு மேற்கொண்டோம்.

உண்மையில் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தபோது, 2019ம் ஆண்டு இந்திய – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி நிறைவின் போது அமெரிக்க ராணுவம் இந்திய தேசிய கீதத்தை இசைத்ததாக செய்தி கிடைத்தது. ஆனால், பிரதமர் மோடியை வரவேற்க அமெரிக்க ராணுவம் இந்திய தேசிய கீதத்தை வாசித்து பயிற்சி செய்ததாக பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்காக இந்த பயிற்சியில் ஈடுபட்டதாக பலரும் பகிர்ந்து வரவே, இந்த வீடியோவின் உண்மை விவரங்களைத் தேடி எடுத்தோம். கடந்த ஆண்டு ஐ.நா சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக மோடி 2019 செப்டம்பர் 21ம் தேதி நியூயார்க் சென்றார். அதற்கு முன்னதாக 2019ம் தேதி செப்டம்பர் மாதம் இந்த வீடியோவை ஏ.என்.ஐ வெளியிட்டிருந்தது. அதில், “Yudh Abhyas 2019 இந்திய – அமெரிக்க ராணுவ கூட்டுப் பயிற்சியின் போது அமெரிக்க ராணுவ வாத்தியக் குழு இந்திய தேசிய கீதத்தை இசைத்தது” என்று குறிப்பிட்டிருந்தனர். 

Archived Link

இதன் அடிப்படையில் கூகுளில் தேடிய போது பல ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் கிடைத்தன. அமெரிக்காவில் நடந்த இந்திய – அமெரிக்க ராணுவ பயிற்சியின் நிறைவு நாளில் அமெரிக்க ராணுவம் இந்திய தேசிய கீதத்தை இசைத்ததாக குறிப்பிட்டுள்ளனர். 

business-standard.comArchived Link

இதன் மூலம் மோடியின் அமெரிக்க பயணத்துக்கும், அமெரிக்க ராணுவத்தினர் இந்திய தேசிய கீதத்தை இசைத்ததற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது. மேலும் இந்திய சுதந்திர தினத்துக்காகவும் அவர்கள் இசைக்கவில்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், 2019ல் அமெரிக்க ராணுவம் இந்திய தேசிய கீதம் இசைத்ததைத் தவறான தகவலுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:2019-ல் இந்திய தேசிய கீதம் வாசித்த அமெரிக்க ராணுவம்; விதவிதமாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False